ETV Bharat / state

சாதியை காரணங்காட்டி பிரசவம் பார்க்க மறுத்த செவிலியர்.. சுகாதார நிலையம் முன்பு குவிந்த உறவினர்கள்.. - Primary Health Centre Caste Issue - PRIMARY HEALTH CENTRE CASTE ISSUE

Primary Health Centre Caste Issue: வெல்லக்கல்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்க்க வந்த கர்ப்பிணி பெண்ணை சாதியை காரணம்காட்டி சிகிச்சை அளிக்காமல் அலைகழித்ததாக செவிலியர்கள் மீது குற்றம்சாட்டி சுகாதார நிலையம் முன்பு உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு.

வெல்லக்கல்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
வெல்லக்கல்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 7, 2024, 10:56 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அம்பேத்கர் காலனி பகுதியைச் சேர்ந்த சிவஞானம் மனைவி நந்தினி. இவருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் நான்காவது குழந்தை பிரசவத்திற்காக வெலக்கல்நத்தம், பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று காலை 10 மணி அளவில் சென்றுள்ளார்.

நந்தினியின் தாயார் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

அப்போது பணியில் இருந்த செவிலியர்கள் பாக்கியலட்சுமி மற்றும் செந்தமிழ் ஆகியோர் நந்தினி ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர் மேலும் நான்காவது குழந்தைக்காக அட்மிட் ஆகியுள்ளார். எனவே இவருக்கு பிரசவம் பார்த்தால் பணம் ஏதும் கொடுக்க மாட்டார். அதன் காரணமாக ஏதாவது சொல்லி அவர்களை வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பி விடுங்கள், என இருவரும் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

இதனை அறிந்த நந்தினி, இதுகுறித்து உறவினர்களிடம் தெரிவித்ததாக தெரிகிறது. இதனையடுத்து, ஆத்திரத்தில் இருந்த உறவினர்கள் இதுகுறித்து செவிலியர்களிடம் கேட்டபோது, உங்களுக்கு மட்டும்தான் குரல் குடுக்க ஆட்கள் இருக்கின்றனரா? எங்களுக்கும் உள்ளனர், நாங்கள் அவ்வாறு எல்லாம் பேசவில்லை என தட்டிக் கழித்துள்ளனர்.

அதன் பின்பு நேற்று மாலை 6 மணி அளவில் மாற்று செவிலியர் பணிக்கு கவிதா என்பவர் வந்துள்ளார். அதன் பின்பு பிரசவம் பார்த்த நிலையில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் ஜாதி பெயரை சொல்லி பேசிய செவிலியர் மீது ஆத்திரத்தில் இருந்த உறவினர்கள் இன்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் வந்தால் அவரிடம் முறையிடுவோம் எனக்கூறி வெலக்கல்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்பு உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு காணப்பட்டது. இதனை அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து விசாரணையை மேற்கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது.. போலீசார் நூல் பிடித்தது எப்படி? காங்கிரஸ் தலைமை நடவடிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.