ETV Bharat / state

ஓய்ந்த தேர்தல் பிரசாரம்.. வேலூர் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மீது வழக்குப்பதிவு! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

A.C.Shanmugam Case: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உட்பட பலர் மீது பாகாயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Case registered against Vellore BJP candidate AC Shanmugam

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 10:53 PM IST

வேலூர்: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்.19) நடைபெறவுள்ளதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையானது இன்று (ஏப்.17) மாலை 6 மணியோடு ஓய்ந்த நிலையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இறுதிக்கட்ட பரப்புரையாக 5 கிமீ தூரத்திற்கு இருச்சக்கர பேரணியாகச் சென்று பரப்புரையை முடித்துக் கொண்டார்.

இந்த நிலையில், அனுமதியின்றி தொரப்பாடியில் இருந்து அண்ணா கலையரங்கம் வரை வாகனப் பேரணி சென்றதாக, தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தேர்தல் பறக்கும் படையினர் புகார் அளித்துள்ளனர்.

பறக்கும் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உட்பட பலர் மீது பாகாயம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் இறுதிக் கட்ட பரப்புரை இருசக்கர வாகனப் பேரணியில், அவரோடு இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ''பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு'' - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.