சென்னை: கடந்த ஜூலை 11ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் யூடியூப் பக்கத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு அரசையும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியையும் அவதூறு பரப்பும் விதமாக பேசியதாக தெரிகிறது.
மேலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கூறி திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜேஷ் என்பவர் கடந்த ஜூலை 22ஆம் தேதியன்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் விசாரணை மேற்கொண்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, ஆவடி காவல் ஆணையரத்திற்குட்பட்ட பட்டாபிராம் காவல் நிலைய போலீசாருக்கு பரிந்துரை செய்திருந்தது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், சீமான் மீது எஸ்சி எஸ்டி பிரிவின் கீழ் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அடுத்த கட்டமாக சீமானுக்கு சம்மன் அனுப்பி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : சீமான் மீது வழக்கு பதிய எஸ்சி எஸ்டி ஆணையம் உத்தரவு! - Seeman