ETV Bharat / state

சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்கு.. நேதாஜி பேரவை அளித்த புகார் என்ன? - SAVUKKU SHANKAR - SAVUKKU SHANKAR

Case on Savukku shankar and Youtuber Felix Gerald: பெண் காவலர்களை அவதுறாக பேசிய விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கோயம்புத்தூரில் இருவரது மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு புகைப்படம்
சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு புகைப்படம் (CREDIT - ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 9:22 AM IST

Updated : May 15, 2024, 11:07 AM IST

கோயம்புத்தூர்: கோவையில் யூ டியூபர் சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் கடந்த 4ம் தேதி கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து சென்னை, திருச்சி, ஊட்டி ஆகிய மாவட்டங்களிலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனியார் யூ டியூப் சேனலில் சவுக்கு சங்கர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றி அவதூறு பரப்பி இழிவுபடுத்தும் வகையில் பேட்டி கொடுத்ததாகவும், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக நேதாஜி பேரவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: “என் வீட்ல எதையாச்சும் வச்சுட்டு போய்டிங்கனா...” - ரெய்டுக்கு வந்த போலீசாரிடம் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி வாக்குவாதம்! - Youtuber Felix Gerald

புகாரின் பேரில் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் 153,153(A)(1)(a), 153(A)(1)(b)506, 505(ll) இந்திய தண்டனை சட்டம் (IPC) ஆகிய சட்டப்பிரிவுகளில் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளநிலையில், இரண்டாவது வழக்காக கோவையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, சவுக்கு சங்கர் மீது 7 வழக்குகள் உள்ள நிலையில், தற்போது 8வது வழக்குப்பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு: சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் ரகசிய விசாரணை - Bengaluru Rameshwaram Cafe Blast

Last Updated : May 15, 2024, 11:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.