கடலூர்: சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா, விடுதலைச் சிறுத்தை கட்சி முகாம் செயலாளரான இவர், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது கோயிலுக்குள் தீட்சிதர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததாகக் தெரிகிறது.
இதனை இளையராஜா, தனது செல்போனில் அதை வீடியோ எடுத்திருக்கிறார். இதனைப் பார்த்த தீட்சிதர்கள் எதற்காக வீடியோ எடுக்கிறாய் என கேட்டு அவரின் செல்போனை பிடுங்கி உள்ளனர். மேலும் கோயில் எங்களுடையது யாரைக் கேட்டு வீடியோ எடுக்கிறாய் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதனையடுத்து விசிக நிர்வாகி தாக்கிய தீட்சிதர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மேலவீதி தந்தை பெரியார் சிலைக்கு முன்பும் விசிக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: திருச்சி ஜல்லிக்கட்டில் அதகளம் செய்த காளையா இது.. எவ்ளோ ஏலத்துக்கு போச்சுன்னு தெரியுமா?
இதனைத் தொடர்ந்து இன்று ஐந்து தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா, இது குறித்து கூறுகையில், "சிதம்பரத்திற்கு அருகிலுள்ள வல்லம்படுகைதான் என் சொந்த ஊர். அதனால் அடிக்கடி நடராஜர் கோயிலுக்கு வந்து தரிசிப்பது என் வழக்கம். இந்தநிலையில் வழக்கம் போல் கோயிலுக்குச் சென்ற நான், சிறிது நேரம் அமரலாம் என்று ஆயிரம் கால் மண்டபத்துக்குச் சென்றேன். அப்போது ஆயிரம் கால் மண்டபத்துக்குப் பக்கத்தில் சுமார் 20 தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அதை என் செல்போனில் வீடியோ எடுத்தேன். இதனை பார்த்த தீட்சிதர்கள் கும்பலாக ஓடிவந்து, வீடியோ எடுக்கக் கூடாது என்று கூறினார்கள். உடனே வீடியோ எடுத்தால் என்ன தப்பு என்று நான் கேட்டதற்கு, "இது எங்கள் கோயில். நாங்கள் எங்கள் இஷ்டத்துக்கு இருப்போம். மேலும் அங்கிருந்த தீட்சிதர்கள் என்னை அடித்து, என் நெஞ்சில் குத்தியது மட்டும் அல்லாமல் என்னுடைய செல்போனை பிடுங்கிக் கொண்டார்கள். இதனால் காவல் நிலையத்தில் தீட்சிதர்கள் மீது புகார் அளித்தேன்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்