ETV Bharat / state

திருவண்ணாமலை அருகே டிராக்டருடன் கார் மோதி விபத்து..! திருமணத்திற்குச் சென்ற 4 பேர் பலி..! - car collided with a tractor

Tiruvannamalai Accident: கீழ்பென்னாத்தூர் அருகே டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விழுப்புரத்தில் இருந்து வந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

car collided with a tractor in Tiruvannamalai Kilpennathur
திருவண்ணாமலை அருகே டிராக்டருடன் கார் மோதி விபத்து
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 9:27 AM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே டிராக்டருன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலையில் இருந்து ஆந்திரா பதிவு கொண்ட வாகனம் கீழ்பென்னாத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற டிராக்டர் மீது மோதிய விபத்தில் காரில் வந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டிராக்டர் ஓட்டி வந்த வள்ளிவாகையை சேர்ந்த டிரைவர் பூங்காவனம் என்பவருக்கு கையில் முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரத்தில் இருந்து கீழ்பென்னாத்தூர் அருகில் கல்லாடிகுளம் பகுதியில் திருமணத்திற்கு வந்ததாகவும், வரும்போது விபத்து ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் காரில் வந்த விழுப்புரம் கஸ்கார்னி பகுதியைச் சேர்ந்த அழகன் (37), அவலூர்பேட்டையைச் சேர்ந்த பாண்டியன் (35), காரில் வந்த முகவரி தெரியாத பிரகாஷ் மற்றும் சிரஞ்சீவி ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த நான்கு பேரின் உடலையும் கீழ்பென்னாத்தூர் போலீசார் கைப்பற்றி உடற்கூராய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்..! கூடுதலாக 1,184 பேருந்துகள் இயக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.