ETV Bharat / state

தென்காசியில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 9 பேர் படுகாயம்! - தென்காசி செய்திகள்

Sankarankovil car accident: சங்கரன்கோவில் அருகே மருக்காலன்குளம் விலக்கில் கார்கள் நேருக்கு நேர் மோதிய வேகத்தில், அடுத்தடுத்த வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

தென்காசியில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 12:50 PM IST

தென்காசி: சங்கரன்கோவில் சண்முகா நகரைச் சேர்ந்த சரவணன் (24), அவரது சகோதரர் அரவிந்த் (22), காயிதேமில்லத் தெருவைச் சேர்ந்த முகம்மதுரியாஸ் (27), தலைவன்கோட்டையைச் சேர்ந்த திலக் (28) ஆகியோர் சங்கரன்கோவிலில் இருந்து நாகர்கோவில் நோக்கி காரில் சென்று கொண்டிருந்துள்ளனர்.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த தனியார் கார் நிறுவன மேலாளர் சாமிநாத கண்ணன், சோதனை ஓட்டத்திற்காக காரை எடுத்துக் கொண்டு சங்கரன்கோவில் நோக்கி வந்துள்ளார். மருக்கலான்குளம் விலக்கு அருகே வந்தபோது 2 கார்களும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

அதேநேரம், மற்றொரு பக்கம் அருகில் சென்று கொண்டிருந்த பைக், ஆட்டோ மீதும் அந்த கார்கள் மோதி உள்ளன. இதில் பைக்கில் வந்த வன்னிக்கோனேந்தலைச் சேர்ந்த மாணிக்கம் (55), ரத்தினம் (70) ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். மேலும், ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேஷ், சண்முகத்தாய் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

2 கார்கள், பைக், ஆட்டோ மோதிக் கொண்ட விபத்தில் ஒரு பெண் உள்பட 9 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்த அரவிந்த், சரவணன், திலக், முகம்மது ரியாஸ் ஆகியோர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் மாசி மகப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.