சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி, சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனையடுத்து, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, கட்சித் தாவல் சட்டத்தின் படி விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட வேண்டும் என சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் அனுப்பியது. இதனையடுத்து, மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பில் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19 அன்றே விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாஜக சார்பில் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் வி.எஸ்.நந்தினி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அதிமுக சார்பில் விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் யூ.ராணி அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த அதிமுக.. யார் யார் எந்தெந்த தொகுதியில் போட்டி?