ETV Bharat / state

இறால் கொள்முதலில் ரூ.1.10 கோடி மோசடி.. தி.நகர் லாட்ஜில் இருந்த தொழிலதிபர் கைது! - Prawn Procurement Issue

Businessman Jayachandran arrested: மயிலாடுதுறையில் இறால் கொள்முதல் செய்து ரூ.1.10 கோடி கொடுக்காமல் மோசடி செய்து தலைமறைவாக இருந்த கடல் உணவு ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ஜெயச்சந்திரனை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஜெயச்சந்திரன் புகைப்படம்
கைது செய்யப்பட்ட ஜெயச்சந்திரன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 6:52 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி தாலுகா திருநகரியைச் சேர்ந்தவர் ராமன். இவர் இறால் கொள்முதல் செய்து வியாபாரிகளுக்கு அனுப்பி வருகிறார். இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு திருச்சி விராலிமலை Ten KT Seafood Solutions என்ற நிறுவனத்தின் உரிமையாளரான ஜெயச்சந்திரன் மற்றும் அவரது பங்குதாரர் சுதாகர் ஆகியோர், ராமனை அணுகி நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் கிலோ இறால் சப்ளை செய்ய வேண்டும் என்றும், 3 நாட்களுக்குள் அதற்கான தொகை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

அதன்படி, அக்டோபர் 2022 முதல் இறால் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஜனவரி 2023 வரையில் இறால் கொள்முதல் செய்ததில் 180 டன் இறாலுக்கு உண்டான ரூ.5.35 கோடி தொகை வழங்க வேண்டும். ஆனால், ரூ.4.25 கோடி ராமனிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜெயச்சந்திரனின் பங்குதாரர் சுதாகர் ரூ.3.39 கோடி பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் ஜெயச்சந்திரன் குறிப்பிட்ட தேதியில் ராமனுக்கு மீதத்தொகையை தராமல் இருந்ததுடன், தலைமறைவாகியுள்ளார்.

இதனால், ராமன் கடந்த ஆகஸ்ட் 2023ஆம் ஆண்டு, இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடைப்படையில், குற்றப்பிரிவு போலீசார் சட்டப்பிரிவு 420இன் கீழ் மோசடி வழக்குப்பதிவு செய்து ஜெயச்சந்திரன் மற்றும் சுதாகரை தேடிவந்தனர்.

இதற்கிடையில், கடந்த பிப்ரவரி 2024ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற ஜெயச்சந்திரன், முன்ஜாமீன் தொகை ரூ.10 லட்சம் கட்டாததால், அவரது 2 வார பிணைக்காலம் காலாவதியாகியுள்ளது. இதனால் ஜெயச்சந்திரனைக் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின்பேரில், குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்னக்கொடி மற்றும் தனிப்படை போலீசார் ஜெயச்சந்திரனை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னை தியாகராய நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஜெயச்சந்திரன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், போலீசார் அங்கு சென்ற நிலையில், போலீசாரைப் பார்த்ததும் ஜெயச்சந்திரன் தப்பி ஓடியுள்ளார். அப்போழுது, நிலை தடுமாறி சாலையில் விழுந்தவரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.

இதனையடுத்து, அவரை கைது செய்து மயிலாடுதுறை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் ராமனை ஏமாற்றியதாக ஒப்புக் கொண்டுள்ளார். அதன் பிறகு, அவரை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, ஜெயச்சந்திரனின் பங்குதாரரான சுதாகர் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளதால், அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: "மனைவியால் மன உளைச்சல்".. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.