ETV Bharat / state

காதல் விவகாரத்தில் தங்கையை வாயிலேயே வெட்டிய அண்ணன்.. சென்னையில் பயங்கரம்! - Brother Attack Sister on Love Issue - BROTHER ATTACK SISTER ON LOVE ISSUE

Brother Attack Sister on Love Issue in Chennai: சென்னை பெசன்ட் நகரில் மகனின் காதல் விவகாரத்திற்கு தங்கை தான் காரணம் எனக் கூறி அவரை அண்ணன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரிவாளுடன் இருக்கும் நபரின் புகைப்படம்
அரிவாளுடன் இருக்கும் நபரின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 10:01 AM IST

சென்னை: பெசன்ட் நகர் அருகே உள்ள ஓடைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அற்புதம்(54). கணவர் இறந்த நிலையில், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் வளாகத்தில் உள்ள பொதுக்கழிப்பறையை குத்தகைக்கு எடுத்து அங்கு வேலை செய்து வருகிறார்.

மேலும், சுமார் 5 வருடங்களுக்கு முன்பு அற்புதத்தின் அண்ணன் மற்றும் அவரது மனைவி இறந்த நிலையில், அண்ணன் மகள் சாருமதியை இவர் தான் வளர்த்து வந்துள்ளார். இதற்கிடையே, சாருமதி அற்புதத்தின் மற்றொரு அண்ணன் கபாலியின் மகன் கிஷோர் என்பவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தங்கையை தாக்க அரிவாளுடன் தேடிய அண்ணன் சிசிடிவி (Credits - ETV Bharat Tamil Nadu)

தற்போது, இதுகுறித்து அறிந்த கபாலி, இந்த காதலுக்குக் காரணம் தங்கை அற்புதம் எனக்கூறி, ஆத்திரத்தில் அரிவாளை எடுத்துக் கொண்டு நேற்று மாலை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலய வளாகத்தில் உள்ள பொது கழிப்பறைக்குச் சென்று, அற்புதத்தைத் தாக்கியுள்ளார்.

அந்த தாக்குதலின் போது, முகத்தில் காயமடைந்த அற்புதத்தை மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் குறிந்து தகவலறிந்து வந்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, கபாலி தனது தங்கையை வெட்டுவதற்காக அரிவாளுடன் ஆவேசமாக தேசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சென்னை மெட்ரோ கழிவுநீர் தொட்டியில் இளைஞரின் சடலம்! போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.