ETV Bharat / state

திருச்சி வருமான வரித்துறை அலுவலகம், சாய் பாபா கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்! - Trichy Bomb threat - TRICHY BOMB THREAT

Trichy Bomb Threat: திருச்சி வருமான வரித்துறை அலுவலகம் மற்றும் மேக்குடி சாய் பாபா கோயிலுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து சோதனை மேற்கொண்ட போலீசார் வெடிகுண்டு மிரட்டல் வதந்தியே என தெரிவித்தனர்.

Sai Baba Temple
திருச்சி சாய் பாபா கோயில் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 8:45 PM IST

திருச்சி: திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்திற்கு மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், வெடிகுண்டு மிரட்டல் உடன், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி இருக்கும் ஜாபர் சாதிக்கை விடுவிக்க கூறியும், சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் இருக்கும் இடம் தெரியும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, திருச்சி மாநகர போலீசார், வில்லியம்ஸ் ரோட்டில் அமைந்துள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில்மோப்ப நாய்கள், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால், சோதனையின் முடிவில் எந்தவித வெடி பொருட்களும் கிடைக்கவில்லை என தகவல் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், திருச்சி மணிகண்டம் அருகே உள்ள மேக்குடியில் சாய் பாபா கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலை காந்திமதி என்பவர் நிர்வாகம் செய்து வருகிறார். இந்த நிலையில், அவரது மகன் கார்த்திகேயனுக்கு நேற்று மின்னஞ்சல் மூலம், நாளை 6 மணியளவில் பெரிய அளவில் வெடிகுண்டு வெடிக்கும் என மெயில் வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர் மணிகண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், மணிகண்டம் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் தலைமையிலான போலீசார், மெட்டல் டிடெக்டர் உடன் சோதனை செய்தனர்.

அது மட்டுமல்லாமல், மோப்பநாய் பொன்னி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு கோயிலை சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரிய வந்தது. மேலும், சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை தான் விசேஷம் என்றும், அந்த நாளில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் கோயில் நிர்வாகமும், பக்தர்களும் அச்சம் அடைந்திருந்தனர்.

இதையும் படிங்க: மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்; பரபரப்பான பரங்கிமலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.