ETV Bharat / state

ஏ.சி.சண்முகத்தின் மருத்துவ கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்! - bomb threat - BOMB THREAT

Bomb threat In Chennai: மக்களவைத் தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஏ.சி சண்முகத்திற்கு சொந்தமான திருவேற்காடு பகுதியில் இயங்கி வரும் மருத்துவ கல்லூரிக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bomb threat In Chennai
Bomb threat In Chennai
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 11:23 AM IST

சென்னை: திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் தனியாருக்கு சொந்தமான பிரபல மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் உள்ள அலுலகத்திற்கு கடிதம் ஒன்று வந்ததுள்ளது.

அதில், ரூ.1 கோடி கொடுக்கவில்லை என்றால் 24 மணி நேரத்தில் கல்லூரியில் வெடிகுண்டு வெடிக்கும் என எழுதப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாக திருவேற்காடு காவல் நிலையத்திற்கு சென்று அந்த கடிதம் குறித்து புகார் அளித்துள்ளனர்.

மேலும், காவல் துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் மருத்துவ கல்லூரி அலுவலகம் மற்றும் வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.

நீண்ட நேரம் சோதனைக்கு பிறகு வெடிகுண்டுகள் ஏதும் இல்லாததை உறுதி செய்த வெடிகுண்டு நிபுணர்கள், அது புரளி என தெரிந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். மேலும், திருவேற்காடு போலீசார் நடத்திய விசாரணையில், வேலூர் மாவட்டத்திலிருந்து தபால் மூலம் இந்த கடிதம் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் மேலும் லட்சுமணன் என்பவர் பெயரில் கடிதம் அனுப்பி இருப்பதும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்த கல்லூரியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவதால், அது சம்பந்தமாக மிரட்டல் விடுக்கும் தோனியில் கடிதம் வந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் திருவேற்காடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு வெடிகுண்டி மிரட்டல் வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி! - MK Stalin Tribute To Pugazhenthi

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.