சென்னை: 2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர், பிப்.12 ஆம் தேதி துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, மூன்றாவது நாள் அமர்வு இன்று (பிப்.14) காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்றைய பேரவையில் முதலில் வினா விடை நேரமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேரமில்லா நேரத்தில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும், 'ஒரு நாடு ஒரு தேர்தல்' திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற இரண்டு தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.
பார்வையற்ற பள்ளி மாணவர்கள்: சட்டப்பேரவை நிகழ்வுகளைக் கல்லூரி மற்றும் மற்றும் பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பேரவை கூட்டம் நடைபெறும் நாட்களில், மாணவர்களைத் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் அழைத்து வருவது வழக்கம்.
சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர்,சபாநாயகர், அமைச்சர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சு மற்றும் அமைச்சர்களின் பதிலுரைகள் மற்றும் முதல்வரின் உரை, இப்படி எல்லா நிகழ்வுகளும் மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக மாணவர்களை அழைத்து வருவார்கள்.
அதனடிப்படையில் 3வது நாளாக நடைபெற்ற சட்டப்பேரவை நிகழ்வுகளை அறிந்து கொள்ள, பூந்தமல்லியில் இயங்கி வரும் ’பார்வையற்றோர் அரசுப் பள்ளியை’ சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று வருகை புரிந்தனர்.
அவர்களுக்குச் சட்டப் பேரவையில் நிகழ்வுகளுக்குப் பற்றி விளக்குவதற்காக அவர்களுடன் ஆசியர்களுக்கு வருகை புரிந்தனர். பின்னர் அவர்களுக்கென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்து பேரவை நிகழ்வுகளை அறிந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தனித் தீர்மானம் - சட்டப்பேரவையில் நிறைவேற்றம்..!