ETV Bharat / state

பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவும் - மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி தலைமைக்குழு உறுப்பினர் சங்கர் உறுதி! - இந்தியா கூட்டணி

Marxist Leninist Party: பாஜக நிச்சயம் இந்த தேர்தலில் தோல்வியைத் தழுவும் என மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சங்கர் பேசியுள்ளார்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி தலைமைக்குழு உறுப்பினர் சங்கர் உறுதி
பாஜக நிச்சயம் இந்த தேர்தலில் தோல்வியை தழுவும்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 10:26 PM IST

பாஜக நிச்சயம் இந்த தேர்தலில் தோல்வியை தழுவும்

மயிலாடுதுறை: தமிழகத்தின் மாநில உரிமையைப் பறிக்கும் வகையில், ஜிஎஸ்டி என்ற பெயரில் மாநிலத்திற்குக் கிடைக்க வேண்டிய வருவாயை நசுக்கும் பாஜக நிச்சயம் இந்த தேர்தலில் தோல்வியைத் தழுவும் என மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சங்கர் கூறியுள்ளார்.

மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் மாவட்ட செயலர் குணசேகரன் தலைமையில் இன்று (மார்.03) நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சங்கர், “பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

தமிழகத்தில் இந்தியா கூட்டணியை ஆதரிப்பது என்று தீர்மானித்துள்ளோம். ஜூலை 1 ஆம் தேதி கிரிமினல் சட்டங்களை மாற்றி புதிய கிரிமினல் சட்டங்களைப் பாஜகவினர் நடைமுறைப்படுத்த உள்ளனர். அதனை நடைமுறைப்படுத்தினால் நாட்டில் ஜனநாயக உரிமை இருக்காது.

ஹிந்துராஸ்டிரா உருவாக்க நினைக்கின்றனர். தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சுட்டுத்தள்ளுவதைவிட மோசமான ஆட்சியாகத்தான் ஹிந்து ராஸ்டிரா இருக்கும். இது இந்து மக்களுக்கு எதிரான ஆட்சியாக இருக்கும். இந்தியாவில் இருக்கக்கூடிய ஜனநாயக, குடியரசு அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றிவிட்டு காட்டுமிராண்டி கால மனுநீதியைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர் விரோதச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும். தமிழகத்தின் மாநில உரிமையைப் பறிக்கும் வகையில் ஜிஎஸ்டி என்ற பெயரில் மாநிலத்திற்குக் கிடைக்க வேண்டிய வருவாயை நசுக்கும். பாஜக நிச்சயம் இந்த தேர்தலில் தோல்வியைத் தழுவும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரு விமான நிலையமே தற்போது தற்காலிக சர்வதேச விமான நிலையமாக உள்ளது.. ஆனந்த் அம்பானி இல்ல விழா குறித்து கார்த்தி சிதம்பரம் காட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.