ETV Bharat / state

சென்னையில் நிதி நிறுவன மோசடி; பாஜக ஆதரவாளர் தேவநாதன் யாதவ் கைது! - Devanathan Yadav arrest

Devanathan Yadav arrest in financial fraud case: நிதி நிறுவன மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், பாஜக ஆதரவாளருமான தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டார்.

கைதான தேவநாதன் யாதவ் (கோப்புப்படம்)
கைதான தேவநாதன் யாதவ் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 4:08 PM IST

சென்னை: சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் 'தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்' என்ற நிதி நிறுவனத்தை தேவநாதன் யாதவ் நடத்தி வருகிறார். மயிலாப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிதி நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் 5 கிளைகள் உள்ளன.

இந்நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத் தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிதி நிறுவனம், முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 15 சதவீதம் வரை வட்டி உறுதி என கவர்ச்சியான விளம்பரம் செய்ததை நம்பி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரம் பேர் நிரந்தர வைப்புத் தொகையாக சுமார் ரூ.525 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.

ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வு தொகை மற்றும் வட்டி பணம் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தினமும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திற்குச் சென்று பணத்தைக் கேட்டு முறையிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பலர் இது குறித்து காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், நிதி நிறுவனம் சார்பில் இதுவரை முறையாக பதில் அளிக்காததால், கடந்த ஜுன் 6ஆம் தேதி முதலீட்டாளர்கள் பலர் நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த நிறுவனம் மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனை அடுத்து, இன்று திருச்சியில் வைத்து தேவநாதன் யாதவை கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட தேவநாதனிடம் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பல கோடி‌ ரூபாய் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான தேவநாதன் யாதவ், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மேலும், இவர் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வேலூர்: தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா சுரேஷ் தகுதி நீக்கம்.. பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.