மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் தொடர்பாக ஆபாச வீடியோ உள்ளதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தொடர்புடைய பாஜக மாவட்டத் தலைவர் அகோரம், மயிலாடுதுறை தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார், மும்பையில் அவரை கைது செய்து உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் ஆபாச வீடியோ உள்ளதாகக் கூறி பணம் கேட்டும் மிரட்டிய வழக்கில் ஒன்பது பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், வினோத், விக்னேஷ், ஸ்ரீநிவாஸ், தனியார் பள்ளி தாளாளர் குடியரசு ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய மயிலாடுதுறை பாஜக மாவட்டத் தலைவர் அகோரம், மயிலாடுதுறை தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார் மும்பையில் கைது செய்து உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் செய்யூர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மோடியின் வாகன பேரணி: மறுத்த கோவை போலீஸ் - அனுமதி அளித்த உயர்நீதிமன்றம்