ETV Bharat / state

பழனி பஞ்சாமிர்தம் குறித்த அவதூறு வழக்கு: பாஜக நிர்வாகிக்கு நிபந்தனை முன்ஜாமீன்! - palani panchamirtham - PALANI PANCHAMIRTHAM

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக நிர்வாகிக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை, பாஜக நிர்வாகி செல்வகுமார்
உயர் நீதிமன்ற மதுரை கிளை, பாஜக நிர்வாகி செல்வகுமார் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2024, 5:30 PM IST

மதுரை: பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்க திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுவதாக பாஜக நிர்வாகி செல்வகுமார் சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பி இருந்தார்.

இதனை மறுத்த கோயில் நிர்வாகம், பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தத்திற்கான நெய், ஆவின் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே வாங்கப்படுவதாக தெரிவித்தது. இது தொடர்பாக வதந்தி பரப்பியதாக, பழனி அடிவாரம் காவல்துறையில் பாஜக நிர்வாகிகள் செல்வகுமார் மற்றும் வினோஜ் பி.செல்வம் மீது புகார் அளிக்கப்பட்டது.

புகாரைப் பெற்ற காவல் துறையினர், கோவையைச் சார்ந்த பாஜக தொழிற்பிரிவு மாவட்ட துணைதலைவர் செல்வகுமார் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது.

இதனையடுத்து, இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி பாஜக நிர்வாகி செல்வகுமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், " திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் வழங்கிய திண்டுக்கல் சேர்ந்த நிறுவனம் ஏற்கனவே அவர்களால் தடை செய்யப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பழனி தண்டாயுதபாணி கோயிலின் டிரஸ்டி உறுப்பினராக இருக்கிறார்

இதையும் படிங்க: பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு; இயக்குநர் மோகன் ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.. பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

இது தொடர்பான சுற்றறிக்கையில் இருந்த தகவலையே நான் பதிவிட்டேன். தவறான நோக்கில் தவறான செய்தியை பரப்பவில்லை. நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும், வழக்கு விசாரணைக்கும் ஒத்துழைக்கிறேன். சாட்சிகளை கலைக்க மாட்டேன். ஆகவே, இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நீதி, "மனுதாரர் எக்ஸ் தளத்தில் பதிவு செய்ததால் மதரீதியான பிரச்சினைகள் உருவாகும் சூழல் ஏற்பட்டது. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோன்ற தரம் தாழ்ந்த அரசியல் செய்யப்படுகிறது. மனுதாரர் 3 வது முறையாக இதுபோன்ற தவறினை செய்துள்ளார். ஆகவே, மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது" என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, "மனுதாரர் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் நிஜத்தில் சேவைகளை செய்ய வேண்டும். எக்ஸ் தளத்தில் பதிவு செய்வதற்கு முன்பாக அதன் உண்மை தன்மையை உறுதிப்படுத்த மனுதாரர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரசு தரப்பில் அவர் பகிர்ந்த தகவல் தவறானது. பழனி பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்காக ஆவினில் இருந்து மட்டுமே நெய் வாங்கப்படுகிறது.

மனுதாரர் 3 வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். தனது அலைபேசியை காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். மனுதாரர் செய்த எக்ஸ் தள பதிவினை நீக்கம் செய்ய வேண்டும். மேலும், அந்த பதிவினை, உண்மை தன்மையை உறுதி செய்யாமல் பதிவிடப்பட்டது என சமூக வலைதளங்களில் தெரிவிக்க வேண்டும்” என்ற நிபந்தனைகளுடன் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும், “ தொடர்ந்து இதுபோல பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற உத்தரவிட நேரிடும்” எனக் குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.