ETV Bharat / state

"கல்லூரியில் கான்ஸ்டிடியூசன் வகுப்பை திருமாவளவன் கட் அடித்திருப்பார்" - பாஜகவின் அஸ்வத்தாமன் விளாசல் - BJP ASUVATHAMAN

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

திருமாவளவன் சட்டக் கல்லூரியில் படிக்கும் பொழுது அரசியலமைப்பு (constitution) வகுப்பை கட் அடித்திருப்பார். அதனால் தான் அடிப்படையும் தெரியாமால் மத்திய அரசுக்கு எதிராக மது ஒழிப்பு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாக நகைச்சுவை செய்கிறார் என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் விமர்சித்துள்ளார்.

விசிக திருமாவளவம்ன், பாஜக அஸ்வத்தாமன்
விசிக திருமாவளவம்ன், பாஜக அஸ்வத்தாமன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் லட்டு பிரசாத கலப்படம் சம்பந்தப்பட்ட செயலில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பேசியுள்ளதாக, அவர் மீது பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கூறியதாவது, "திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டை தமிழக அரசுக்கு எதிராக தான் நடத்த வேண்டும். ஆனால், அது மத்திய அரசுக்கு எதிராக என்று அவர் கூறியுள்ளார். அது மிகப்பெரிய நகைச்சுவையாக உள்ளது. திருமாவளவன் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படித்தவர். ஆனால், அடிப்படை சட்ட அரசியலமைப்பு புரிதல் இல்லாமல் மாநாட்டை அறிவிக்கிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது" எனக் கூறினார்.

பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: அடி மாட்டு விலையில் நெய்! திருப்பதி லட்டு கலப்படத்திற்கு இது தான் காரணமா?

கான்ஸ்டிடியூஷன் வகுப்பை கட் அடித்துவிட்டார்: தொடர்ந்து பேசிய அவர், "மது மற்றும் மதுவிலக்கு ஆகியவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பட்டியலில் உள்ளது. மாநிலப் பட்டியலில் வருகிற செயலுக்கு மத்திய அரசு எப்படி சட்டம் இயற்ற முடியும். திருமாவளவன் சட்டக் கல்லூரியில் படிக்கும் பொழுது கான்ஸ்டிடியூஷன் (constitution) வகுப்பை கட் அடித்துவிட்டார் போல. அதனால் தான் அடிப்படையும் தெரியாமால் அவர் மத்திய அரசுக்கு எதிராக மது ஒழிப்பு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாக நகைச்சுவை செய்கிறார்" என விமர்சனம் செய்தார்.

நாடக மது ஒழிப்பு மாநாடு: "திருமாவளவன் நடத்துவது நாடக மது ஒழிப்பு மாநாடு. மது ஒழிப்புக்காக உண்மையாக போராடும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை அவர் அழைக்கவில்லை. திருமாவளவன் நடத்துவது போலி மது ஒழிப்பு மாநாடு" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.