ETV Bharat / state

எந்த நேரத்திலும் எம்பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம் - அண்ணாமலை

BJP Annamalai K: வேலூர் எம்பி கதிர் ஆனந்த் வீட்டில் எந்த நேரத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்த வாய்ப்புள்ளது என கே.வி.குப்பத்தில் என் மண் என் மக்கள் நடைபயணத்தின்போது அண்ணாமலை கூறியுள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 7:18 PM IST

அண்ணாமலை பேட்டி
அண்ணாமலை பேட்டி
அண்ணாமலை பேட்டி

வேலூர்: "என் மண் என் மக்கள்" யாத்திரையின் ஒரு பகுதியாக, இன்று (பிப்.03) பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார். முன்னதாக, குடியாத்தம் பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை, கள் இயக்கத்தினர் இறக்கும் முதல் கள்ளை தான் குடிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “இந்த யாத்திரை, மாற்றங்களுக்கான யாத்திரை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியைத் தவிர்த்து, மற்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. 12 கோடி வீட்டில் கைப்பற்றியதால் தேர்தலில் நிறுத்தப்பட்டது. மீண்டும் ஆகஸ்ட் மாதம் 2019இல் நடைபெற்ற தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்

விவசாயிகளின் நீண்ட நாட்கள் கோரிக்கையான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், கால்வாய் சீரமைப்பு, மாம்பழத்திற்கான குளிர்சாதன வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத எம்.பிதான் கதிர் ஆனந்த். அமைச்சர் துரைமுருகனின் ஊரான கே.வி.குப்பம், காங்குப்பம் பகுதியில் கதிர் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி ஏ.சி.சண்முகம் லீட் கொடுத்தார். விரைவில் அமலாக்கத்துறை கதிர் ஆனந்த் வீட்டின் கதவைத் தட்ட வாய்ப்பு உள்ளது” என்றார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறுகையில், “எங்களைப் பொறுத்தவரை, 2024 தேர்தலுக்குத் தயாராக இருக்கிறோம். கூட்டணி பேச்சுவார்த்தைக்கு இன்னும் காலம் இருக்கிறது. மனோஜ் தங்கராஜுடன் விவாதிக்க நான் எனது செய்தித் தொடர்பாளரை வேண்டுமானால் அனுப்பி வைக்கிறேன்.

அவரோடு எங்கள் செய்தித் தொடர்பாளர் எப்போது வேண்டுமானாலும் வந்து பேசத் தயார். அதற்கான நேரத்தையும், இடத்தையும் அவர் குறிப்பிடட்டும். வேண்டுமானால், அவர்களது தலைவரான மு.க.ஸ்டாலினை அனுப்பி வைத்தால், பாரதிய ஜனதா கட்சி தலைவர் என்ற முறையில் நான் நேரடியாக விவாதிக்க தயார்.

இந்தியா சரித்திரத்தில் யாராவது ஒரு முதல்வரோ அல்லது பிராந்தியத் தலைவரோ 10 நாள் டூர் போய் பார்த்திருக்கிறீர்களா? என்ன சொன்னாலும் மக்கள் நம்புவார்கள் என எங்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறது திமுக. ஸ்பெயினுக்குச் சென்றுதான் முதலீட்டை இருக்கிறோம் என்று சொன்னால், சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தோல்வியுற்றதாக ஒப்புக் கொள்கிறார்களா? இந்தியாவின் மிக முக்கியமான ஊழல்வாதிகள் இந்தியா கூட்டணியில்தான் உள்ளனர்.

ஒவ்வொரு ஊழல் பட்டியலையும், ஒவ்வொரு வகையில் வெளியிட்டு வருகிறோம். இன்னும் ஐந்து ஆடியோ பைல் உள்ளது. ஒவ்வொரு வாரத்திற்கு ஒன்று வெளியிடப்படும். திமுக இளைஞரணி மாநாட்டில் காவாலயா காவலயா பாட்டு போட்டு நடனம் ஆடியது போல், அவர்கள் கனவு உலகத்தில் வாழட்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணியை நாங்கள் உருவாக்கியது, கதவு திறந்திருக்கிறது ஜன்னல் திறந்திருக்கிறது யார் வேண்டுமானாலும் வரலாம். என்னுடைய என் மண் என் மக்கள் யாத்திரை முடிவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார், அதன் தேதி இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: நான் உயிரோடு இருக்கிறேன் - பூனம் பாண்டே வெளியிட்ட வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.