ETV Bharat / state

தமிழகத்தில் பூரண மது விலக்கு சாத்தியமில்லை - அண்ணாமலை சொல்லும் மாற்று யோசனை! - ANNAMALAI URGES TO OPEN KALLU SHOP - ANNAMALAI URGES TO OPEN KALLU SHOP

ANNAMALAI URGES TO OPEN KALLU SHOP: சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை, அவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில் நிதியுதவி கொடுப்பதாக பார்க்கிறோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா தினத்தில் யோகா மேற்கொண்ட அண்ணாமலை
சர்வதேச யோகா தினத்தில் யோகா மேற்கொண்ட அண்ணாமலை (Image CREDIT - ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 4:14 PM IST

கோயம்புத்தூர்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் பல்வேறு யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோகா மையத்தில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று யோகா பயிற்சிகளை செய்தார்.

அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு (Video CREDIT -ETV Bharat TamilNadu)

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "ஆதியோகி முன்பு நாம் நின்று கொண்டு இருக்கிறோம். யோகாவை வாழ்வியல் முறையாக மக்கள் கடைபிடித்து வருகின்றனர். சர்வதேச யோகாவை உலகம் முழுவதும் இந்தியர்கள் எடுத்து செல்கின்றனர். பிரதமர் ஸ்ரீ நகர் பகுதியில் யோகா செய்து வருகிறார். நாம் இன்று இங்கு யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம். இன்று கிரியா பயிற்சி செய்து உள்ளோம்.

மனஅழுத்தத்தின் ஆரம்ப புள்ளியாக செல்ஃபோன் பயன்பாடு வந்துள்ளது. தற்கொலை வரைக்கும் சோஷியல் மீடியா கொண்டு சென்றுள்ளது. நம்முடைய வாழ்வியலில் உள்நோக்கி பயணம் செய்ய வேண்டும். காலம் வேகமாக நம்மை ஓட வைக்கின்றது. தனிமையாக இருந்தாலும் இன்பமாக வாழ வேண்டும். ஈஷா அரசியல் சார்ந்த பகுதி இல்லை. இங்கு அரசியல் பேசுவது சரியில்லை. பள்ளிக்கல்வி துறையில் யோகா கொண்டு வர வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் யோகா குறித்த அம்சங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் யோகாவை கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும்.

போலீசில் இருந்தபோது மனஅழுத்தம்: நான் காவல் துறையில் இருந்தபோது, மனஅழுத்தம் அதிகளவில் இருந்தது. அப்போது அதிலிருந்து வெளிப்பட ஈஷாவிற்கு வந்தேன். மனஅழுத்தத்தில் இருந்து வெளியே வர யோகா எனக்கு மிகப்பெரிய கருவி.தாமரை இலை மேல் தண்ணீர் போன்று இருக்க வேண்டும். அதற்கு யோகா உதவி செய்யும்.

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்துள்ளது போன்ற சம்பவங்களால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. பெண்கள் என்னை கட்டி அழுதது அதிகளவில் பாதித்துள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் குடும்பமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. அவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில் பணம் கொடுக்கிறோம்.

கள்ளு கடைகள் திறக்க வேண்டும்: ஈம காரியம் செய்ய கூட பணம் இல்லை. அந்த குடும்பம் கஷ்டத்தில் இருந்து வெளியே வர பணம் கொடுக்கிறோம். பணம் அதிகம் உள்ளவர்கள் கள்ளச்சாராயம் குடிப்பதில்லை. பாஜக சார்பிலும் 1 லட்சம் அறிவித்துள்ளோம். தமிழகத்தில் பூரண மது விலக்கு சாத்தியமில்லை. கள்ளு கடைகள் கொண்டு வரும் நேரமிது. குடிக்க நினைப்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையாக கள்ளு கடை திறக்க வேண்டும்.

முதலில் 1000 மதுபான கடைகளை அடைக்க வேண்டும். அரசு மதுக்கடைகளை எடுத்து நடத்தக்கூடாது. மது விற்பனை, கள்ளு விற்பனை அரசு கண்காணிக்க வேண்டும். அரசிற்கு வருமானம் வரட்டும். அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை சரியில்லை. முதலமைச்சர் கையில் இருக்கும் துறையில் பிரச்சனை உள்ளது. இளைஞர்களிடம் போதை பழக்கம் அதிகரித்துள்ளது" என்று அண்ணாமலை தெரிவித்தார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்து கடந்த ஆண்டே ஈபிஎஸ் கடிதம்.. அரசின் அலட்சியத்தால் வந்த ஆபத்து என சாடல்! - Illegal liquor issue

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.