மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வியாபாரி செட்டி தெருவில் அன்பு என்ற பெயரில் குடியிருப்பு வளாகம் ஒன்று உள்ளது. இங்கு இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்பு வளாகத்தில் கடந்த மாதம் 22 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் குடையால் முகத்தை மறைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர்,
ஒரே நிமிடத்தில் அங்குள்ள இருசக்கர வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து வண்டியை வெளியே தள்ளி வருகிறார். தொடர்ந்து, வெளியில் சென்று ஒரே கிக்கில் வண்டியை ஸ்டார்ட் செய்து புகையாக மறைந்து விடுகிறார். இதில், உள்ளே வரும்போதும் குடையால் மறைத்திருந்ததாலும், வெளியில் செல்லும்போது பின்புறம் மட்டுமே தெரிவதாலும் வண்டியைத் திருடிச்சென்றது யார் என்பது முகம் தெரியவில்லை. இது தொடர்பாக குடியிருப்பில் வசிக்கக்கூடிய வாகனத்தின் உரிமையாளர் சுந்தரம், குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று திருடு போன இரு சக்கர வாகனம் சேத்திரபாலபுரம் ரயில்வே கேட் அருகே நின்று கொண்டிருந்த பார்த்த போலீசார், வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சென்னையை சேர்ந்த (46) என்பது தெரியவந்துள்ளது. பெயிண்டர் வேலை செய்து வந்த இவர்,
காரைக்காலில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து சுந்தரம் வசித்து வந்த அதே வளாகத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாடகைக்கு குடியிருந்து வந்தது தெரிய வந்துள்ளது. ஒரு வாரமாக குடியிருப்பு வளாகத்தை நோட்டமிட்டு வந்த முத்து, சுந்தரத்தின் இருசக்கர வாகனத்தை திருடி விட்டு பின்னர் மாயமாகியுள்ளார்.
மேலும் தன்னுடைய அண்ணனிடம் இருசக்கர வாகனம் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 30 ஆயிரம் பணம் பெற்ற முத்து, திருடிய இரு சக்கர வாகனத்தைக் கொடுக்க முற்பட்ட போது போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கையது தெரியவந்துள்ளது. இதனையடுத்து முத்துவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: “ஓடுற பஸ்ச ஒரே காலால எப்டி நிறுத்துனேன் பாத்தியா..” மதுப்பிரியருக்கு எலும்பு முறிவு.. மயிலாடுதுறையில் நடந்தது என்ன?