சென்னை: சென்னை மாதவரம் மூலக்கடையில் தனியாருக்கு சொந்தமான வெளிநாட்டுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் கண்டெய்னர் முனையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த முனையத்தில் இரவு பகல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருப்பது வழக்கம். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் சுமார் 15 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று கண்டெய்னர் பெட்டிகளை அடுக்கி வைக்கும் இடத்தில் இருப்பதை ஊழியர் ஒருவர் பார்த்துள்ளார்.
உடனடியாக இது குறித்து மேலாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மேலாளர் மற்றும் சக ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கட்டுவிரியன் வகை பாம்பை போல ஒரு அரிய வகை மலைப்பாம்பு ஒன்று சுருண்டு படுத்து கிடந்ததுள்ளது.
படுத்து கிடந்த பாம்பு: உடனடியாக பாம்பை அங்கிருந்து அகற்றுவதற்காக முனைய மேலாளர், மாதவரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து காவலத்துறையினர், பாம்பு இருந்தாக கூறப்படும் இடத்திற்கு போய் பார்த்த போது, பாம்பு படுத்திருந்ததை கண்டனர். இது தொடர்பாக உடனடியாக அவர்கள் செம்பியம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தை அடுத்து விரைந்து வந்த செம்பியம் தீயணைப்புத் துறையினர் உடனடியாக அந்த பாம்பினை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
பாம்பை புடித்த தீயணைப்பு வீரர்கள்: பாம்பு போக்கு காட்டியபடி இருந்ததால் அதனை லாவகமாக பிடிக்க, பாம்பு பிடி கருவி கொண்டுவரப்பட்டு அந்த அரிய வகை மலைப்பாம்பினை பிடித்து ஒரு பிளாஸ்டிக் பெட்டிக்குள் அடைத்தனர். பிடிக்கப் பட்ட மலைப்பாம்பானது சுமார் 15 அடி நீளம் கொண்டது. இதனைத் தொடர்ந்து கிண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கிண்டி வனத்துறையினரிடம் பிடிப்பட்ட பாம்பு ஒப்படைக்கப்பட்டது.
வெளிநாட்டு பாம்பு: பின் அந்த அரிய வகை மலை பாம்பு குறித்து சோதனை செய்த வனத்துறையினர், இது நமது நாட்டு மலைப்பாம்பு கிடையாது வெளிநாட்டில் வாழும் ஒரு வகையான அரிய வகை மலைப்பாம்பு என்று கண்டறிந்துள்ளனர். மேலும் வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த கண்டெய்னர் பெட்டிக்குள் இருந்து இந்த மலை பாம்பு ஊடுருவி இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்த பாம்பு அடர்ந்த காட்டுக்குள் விடப்படவுள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இவ்வாறு கண்டெய்னர் முனையத்தில் வெளிநாட்டு அரிய வகை மலைப்பாம்பு சிக்கிய சம்பவம் தொழிலாளர்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே பெறும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி - கார் ஷெட் - குடியிருப்பு.. திருப்பத்தூரை பரபரப்பாக்கிய சிறுத்தை பிடிபட்டது!