ETV Bharat / state

வீடுகளை காலி செய்ய காலக்கெடு.. வேதனையில் மாஞ்சோலை தேயிலைத் தொட்ட தொழிலாளர்கள்! - manjolai tea estate - MANJOLAI TEA ESTATE

Manjolai tea estate: மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தங்களது குடியிருப்புகளை காலி செய்யும்படி பிபிடிசி நிறுவனம் காலக்கெடு அளித்து நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இதனால் அம்மக்கள் வேதனையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மாஞ்சோலை தேயிலைத் தொட்ட தொழிலாளர்கள்
மாஞ்சோலை தேயிலைத் தொட்ட தொழிலாளர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 6:50 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. அப்பகுதியைச் சுற்றியுள்ள ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட இடங்களை 1919ஆம் ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரை, சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் என்ற தனியார் நிறிவனம் (BBTC) 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்றிருந்தது.

இந்த குத்தகை காலம் முடிவதற்கு இன்னும் 4 ஆண்டுகளே உள்ள நிலையில், மாஞ்சோலை பகுதியை வனத்துறை காப்புக்காடாக அறிவிக்க உச்ச நீதிமன்றம் ஆணை வழங்கி உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, மாஞ்சோலை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வனத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை மலையிலிருந்து காலி செய்து, கீழே அனுப்பும் பணிகளை பிபிடிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தொழிலாளர்களுக்கு பிபிடிசி நிர்வாகம் விருப்ப ஓய்வு வழங்கி வருகிறது. இதற்கான நோட்டீஸ் சமீபத்தில் வழங்கப்பட்டது.

அதேநேரம், சுமார் 100 ஆண்டுகளாக மாஞ்சோலையில் வசித்து வந்த தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டத்தை விட்டு பிரிய மனமில்லாமல் இடத்தை காலி செய்ய தயங்கி வருகின்றனர். பல ஆண்டுகளாக தேயிலைத் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த இம்மக்கள், தாங்கள் வனத்தைவிட்டு வெளியேறி மற்ற வேலைகள் செய்ய முடியாது என வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், அரசு தேயிலைத் தோட்டத்தை பொறுப்பேற்ற ஏற்று நடத்த வேண்டும் என்பது தொழிலாளர்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், மாஞ்சோலை பகுதியில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவாக, அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் அரசு அதிகாரிகளைச் சந்தித்து, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

பிபிடிசி நிறுவனம் வெளியிட்ட நோட்டீஸ்
பிபிடிசி நிறுவனம் வெளியிட்ட நோட்டீஸ் (Credits - ETV Bharat Tamil Nadu)

இது ஒருபுறம் இருக்க, பிபிடிசி நிறுவனம் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்ற முயற்சிப்பதாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காலி செய்யாவிட்டால் தொழிலாளர்களின் வீடுகளுக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகளை துண்டிப்பதாக மிரட்டுவதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனிடையே, நேற்று (திங்கள்கிழமை) மாஞ்சோலை அடுத்த நாலுமுக்கு பகுதியைச் சேர்ந்த தேயிலைத் தொட்ட தொழிலாளர்கள், நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது, ஆட்சியர் கார்த்திகேயன் தங்களிடம் சரிவர பேசவில்லை என்றும், தங்கள் பிரச்னை குறித்து காது கொடுத்து கேட்கவில்லை என்றும் தொழிலாலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

பிபிடிசி வெளியிட்ட புதிய நோட்டீஸ்: இந்த நிலையில், 45 நாட்களுக்குள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என பிபிடிசி நிர்வாகம் மேலும் ஒரு நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதில், "நீங்கள் விருப்ப பணி ஓய்வு வேண்டி, தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (BBTC Ltd) பணிகளிலிருந்து விடுவிக்க கோரியும், தீர்வு ஒப்பந்தம் மற்றும் விருப்ப பணி ஓய்வு திட்டத்தின் படியிலான முன் முதிர்ந்த பணி ஓய்வு பலன்கள் கேட்டும் விண்ணப்பித்துள்ளீர்கள்.

நீங்கள் தாமாகவே முன் வந்து உங்களுக்கு கிடைக்கப் பெற்ற செய்திகள் மற்றும் விசாரணைகளின்படி, ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஒப்புதல் அளித்துள்ளதோடு, மேற்படி தீர்வு ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் குறித்து நீங்களோ அல்லது உங்களது ஆலோசகர்களோ, உங்கள் பிரதிநிதிகளோ அல்லது வழக்கறிஞர்களோ எந்த ஒரு மறுப்புரைகளும் இனி வருங்காலங்களில் எழுப்ப வழிமுறைகள் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளீர்கள்.

மேலும், உங்களது குடும்ப உறுப்பினர்களுடன் குடியிருப்புக்காக மாஞ்சோலை எஸ்டேட்டில் கொடுக்கப்பட்ட குடியிருப்பை, நீங்கள் காலி செய்து, இறுதி நாளிலிருந்து 45 நாட்களுக்குள் பிபிடிசி லிமிடெட் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மீதமுள்ள கருணைத் தொகையானது வழங்கப்படும்" என நோட்டீஸ் வழங்கியுள்ளது. இது தேயிலைத் தோட்ட தொழிளாலர்கள் மத்தியில் மேலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நீர்மட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக மதுரையில் இரு தனியார் குடிநீர் நிறுவனம் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.