ETV Bharat / state

விஷால் - லைகா விவகாரம்; வங்கிக் கணக்கு ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு! - Vishal Vs Lyca

Actor Vishal Case: விஷால் பிலிம் ஃபேக்டரியின் வங்கிப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக நீதிமன்றம் நியமித்த ஆடிட்டர் சமர்ப்பித்த ஆவணங்களை தனக்கு வழங்க வேண்டும் என நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Actor Vishal Case
Actor Vishal Case
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 8:11 PM IST

சென்னை: விஷால் பிலிம் ஃபேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக, சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தாததாக, நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை வழக்கு கணக்கில் டெபாசிட் செய்யவும், சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யவும் நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதிசெய்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் மற்றும் விஷால் இருவருக்கும் இடையே நடைபெற்ற பணப்பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ய ஆடிட்டர் ஶ்ரீகிருஷ்ணா என்பவரை நியமித்து, 3 ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கு விவரங்களையும், இன்றைய நாள் வரைக்குமான வங்கிக் கணக்கு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆடிட்டர் ஶ்ரீகிருஷ்ணா, லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் மற்றும் விஷால் இருவருக்கும் இடையே நடைபெற்ற பணப்பரிவர்த்தனை குறித்த வங்கிக் கணக்கு ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதனை அடுத்து, விஷால் தரப்பில், ஆடிட்டர் ஶ்ரீகிருஷ்ணா நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வங்கிக் கணக்கு ஆவணங்களை தங்களுக்கும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஆருத்ரா மோசடி வழக்கு; திருவள்ளூர் கிளை இயக்குனர் ஜாமீன் கோரிய மனு குறித்து சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.