ETV Bharat / state

'வரலாறு முக்கியம் அமைச்சரே'.. சிந்து சமவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் கூறுவது என்ன? - Balakrishnan IAS - BALAKRISHNAN IAS

புலம்பெயர்ந்து வந்தவனே நாகரிகம் படைக்கிறான். புலப்பெயர்வு இல்லாமல் இந்த உலகத்தின் வரலாறு இல்லை. நகர்கின்றவர்கள் இல்லாமல் நாகரீகம் இல்லை என சிந்து சமவெளி குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் கூறியுள்ளார்.

சிந்து சமவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன்
சிந்து சமவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2024, 7:59 PM IST

Updated : Sep 25, 2024, 3:00 PM IST

மதுரை: மதுரை திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழ்நாடு வரலாற்று பேரவையின் 31ஆம் ஆண்டு கருத்தரங்கு நடைபெற்றது. செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற்ற இக்கருத்தரங்கில் பல்வேறு அறிஞர்கள் தங்களது கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அதன் நிறைவு விழாவில் சிந்துவெளி ஆய்வாளரும் இந்திய ஆட்சிப் பணியின் முன்னாள் அலுவலருமான பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "தமிழக தொல்லியல் ஆய்வுகளுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி வேண்டும் என்று கோரிக்கை வைப்பதை விட, அமர்நாத் ராமகிருஷ்ணா கீழடியில் மேற்கொண்ட இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை முதலில் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும்.

சத்தியமூர்த்தியின் பங்களிப்பு: ஆதிச்சநல்லூரில் கடந்த 1906ஆம் ஆண்டு அலெக்சாண்டர் ரீயால் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்குப் பிறகு கடந்த 2004ஆம் ஆண்டு தொல்லியல் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தியால் அதே இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு அறிக்கை கடந்த 2019ஆம் ஆண்டு தான் உயர்நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையும் கூட சத்தியமூர்த்தியின் பங்களிப்பு குறித்த எந்த தகவலுமின்றி வெளியானது வேதனைக்குரியது.

இந்த சூழலில், வரலாறு என்பது என்ன என்பது குறித்த ஒரு புரிதல் நமக்கு வேண்டும். நம்முடைய புரிதலின்படி வரலாறு என்பது எழுதப்பட்டது. இவையெல்லாம் வரலாற்று காலம், பெருங்கற்காலம், கற்காலம் என்றெல்லாம் வகைப்படுத்தப்படுகிறது. நீண்ட நெடிய மனித வரலாறு என்ற நாடகத்தின் கடைசி அங்கம் தான் வரலாறு என்பது.

இந்த உலகத்தில் உள்ள எழுத்து உள்ள மொழிகளையும், எழுத்து இல்லா மொழிகளையும் கணக்கிட்டுப் பார்த்தால் எழுத்து இல்லாத மொழிகள்தான் அதிகம். அப்படி என்றால் அந்த மொழி பேசுகின்ற மக்களுக்கு வரலாறு இல்லை என்று அர்த்தமாகி விடாது.

எது வரலாறு: ஆகையால் வரலாறு என்பது, யார் அதை எழுதினார்கள் என்பதைப் பொறுத்தது. வரலாறு என்பது கட்டமைக்கப்படுவது. ஒரு மன்னர் தன்னை பற்றி தவறாக எழுதி வைத்து விட்டு சென்றார் என்ற வரலாறு எங்கேயும் உண்டா? எந்த செப்பேடுகளிலும் ஓலைகளிலும் மன்னர்களுடைய மற்றொரு பக்கமோ அல்லது அவர்களின் பலவீனங்களோ எழுதப்பட்டதே இல்லை. சிங்கத்தின் வரலாறை வேட்டைக்காரன் எழுதினால் வேட்டைக்காரனின் பார்வையில் தான் அந்த வரலாறு இருக்கும் என்பது ஒரு ஆப்பிரிக்க பழமொழி.

ஆக கட்டமைக்கப்பட்ட மன்னர்களின் வரலாறு என்பது வரலாறு ஆகாது. மக்களின் வரலாறு தான் உண்மையான வரலாறு. மக்களின் வரலாறு தவிர்த்து மற்றவை எல்லாம் வெறும் வாய்க்கால் தகராறு தான். இந்த சூழலில் தான் மக்களின் வரலாறு என்ற கட்டமைப்பு தேவைப்படுகிறது. அந்த சாதாரண மக்களின் வரலாறு தான் சமூக பொருளாதார வரலாறு. இதுதான் எளிய மக்களின் வரலாற்றை பேசும்.

இதையும் படிங்க: கண்ணப்பர் திடல் மக்களின் 22 ஆண்டுகால கனவை நனவாக்கிய தமிழக அரசு! பயனாளிகள் நெகிழ்ச்சி

நமது சங்க இலக்கியங்களை புரட்டிப் பார்த்தால் ஆட்சியாளர்கள் குறித்தும் இருக்கும், எளிய மக்களின் பதிவுகளையும் அவற்றில் காணலாம். ஒரு நாட்டைப் பற்றிய புரிதல் என்பது அந்த நாட்டில் உள்ள எளிய மக்களின் வரலாற்றைப் பற்றிய புரிதலுடன் கூடியதாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

வரலாற்றின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை: ஆனால், இது போன்ற வரலாறுகளை நாம் செப்பேடுகளிலோ கோயில் சுவர்களிலோ காண முடியாது. மக்களின் வரலாறு குறித்து பேசும் போதுதான் உண்மையான வரலாற்றின் போக்கை நாம் புரிந்து கொள்ள முடியும். பூமிக்கு இருப்பது போன்றே அட்சரேகை, தீர்க்கரேகை ஆகியவை வரலாற்றுக்கும் உண்டு. இந்த தியரி உங்களுக்கு வியப்பாக தெரியலாம். ஆனால், மக்களின் வரலாற்றை எழுதும் போது இந்த அட்சரேகை தீர்க்கரேகை நிச்சயமாக உண்டு.

மக்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் இந்த வரலாறும் உடன் செல்கிறது. ஒரு நிலச் சூழலுக்குள் வரலாறு குறித்து நாம் பேச முற்படும்போது இங்கு இருந்தவர்கள், வந்தவர்கள், நிலவிய சாதி கட்டமைப்பு போன்றவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி வெறித்தனம் கொண்ட வரலாறாக மாறிவிட வாய்ப்புள்ளது.

நகர்கின்றவர்கள் இல்லாமல் நாகரீகம் இல்லை: பல கோடி பல லட்சம் ஆண்டுகளாக நாங்கள் இங்கே வாழ்ந்து வருகிறோம் எனவும், நான் இங்கிருந்து உலகமெல்லாம் செல்வேன் ஆனால் நான் எங்கிருந்தும் வரவில்லை எனவும் சிலர் கருதிக்கொள்கிறார்கள். ஆக குத்தவைத்து உட்கார்ந்து கொண்டிருப்பவன் இன்னும் குகையிலேயே தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். நகர்ந்து வந்தவனே நாகரிகம் படைக்கிறான். ஆகையால் இந்த வரலாறு புலம் பெயர்ந்ததைப் பற்றி பேச வேண்டும். புலப்பெயர்வு இல்லாமல் இந்த உலகத்தின் வரலாறு இல்லை. நகர்கின்றவர்கள் இல்லாமல் நாகரீகம் இல்லை" என்று தெரிவித்தார்.

Last Updated : Sep 25, 2024, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.