ETV Bharat / state

மதுபோதையில் சிறுவர்களை தாக்கிய விவகாரம்; தலைமறைவான பிரபல பின்னணி பாடகரின் மகன்களை தேடும் சென்னை போலீஸ்! - mano sons abscond - MANO SONS ABSCOND

மதுபோதையில் சிறுவர்களை தாக்கிவிட்டு தலைமறைவான பின்னணி பாடகர் மனோவின் இரு மகன்கள் உள்ளிட்ட 3 பேரை வளசரவாக்கம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தலைமறைவான பாடகர் மனோவின் மகன்கள்
தலைமறைவான பாடகர் மனோவின் மகன்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2024, 5:09 PM IST

சென்னை : சென்னை, ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த கிருபாகரன் மற்றும் மதுரவாயிலைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோர் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால்பந்து ட்ரைனிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு பயிற்சி முடிந்து அருகே உள்ள உணவகத்தில் உணவு வாங்க சென்றுள்ளனர். அப்போது பின்னணி பாடகர் மனோவின் மகன் உட்பட ஐந்து பேர் மது போதையில் கிருபாகரன் மற்றும் 16 வயது சிறுவனிடம் தகராறு செய்து அடித்ததாக கூறப்படுகின்றது.

சிறுவர்கள் தாக்கப்படும் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இதில், கிருபாகரனுக்கும், சிறுவனுக்கும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கிருபாகரன் கிழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரணைக்காக பாடகர் மனோவின் மகன்கள் உள்ளிட்ட 5 பேரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

இதையும் படிங்க : தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திருட்டு..கையும் களவுமாக சிக்கிய தொழிலாளர்கள்! - thoothukudi iron plates theft

பின்னர் இன்று பாடகர் மனோவின் மகன்கள் ரஃபிக், சாஹீர் மற்றும் 3 நண்பர்கள் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனோ மகன்களின் நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மற்ற ஒரு நபரும், மனோவின் 2 மகன்களும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே மனோ மகன்கள் மதுபோதையில் ஆபாச வார்த்தைகள் பேசி தாக்குதலில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன.

இந்நிலையில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட கிருபாகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மதுபோதையில் மனோவின் மகன்கள் சாலையில் சென்றவர்களிடம் பிரச்னை செய்தனர். அந்த வகையில் எங்களையும் ஆபாசமாக பேசி தாக்கினர். போலீசார் இருந்ததால் எங்கள் மீது குறைவான தாக்குதல் நடத்தப்பட்டது. இல்லையென்றால் நிலைமை மோசமாகியிருக்கும்" என்று தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.