ETV Bharat / state

செந்தில் பாலாஜி வழக்கும், அமலாக்கத்துறை விசாரணையும்.. பின்னணி என்ன? - v senthil balaji

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 17 hours ago

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் கழித்து சிறையில் இருந்து வெளியே வரவுள்ளார்.

செந்தில் பாலாஜி (கோப்புப்படம்)
செந்தில் பாலாஜி (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கடந்த 2011-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக 1 கோடியே 62 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் ஆகியோர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் பேரில் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் ஆகிய நால்வர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

காவல்துறை வழக்குப் பதிவு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டதால் வழக்கை முடித்தது. அதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சமரசம் என்பது பணம் கொடுக்கல் வாங்கல் நடந்திருப்பதை உறுதி செய்கிறது. தவறு செய்யாத யாரும், யாருடனும் சமரசம் செய்ய அவசியம் இல்லை. அதனால், வழக்கை மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவையடுத்து, வருமானவரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை செய்து, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். ஆவணங்களின் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது.

இதையும் படிங்க: விசிகவுக்கு உள்ளேயே விலக்கி வைக்கப்படுகிறாரா ஆதவ் அர்ஜுனா? - சர்ச்சையின் பின்னணி என்ன?

கைதுக்குப் பிறகு நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜி, சிகிச்சைக்குப் பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜின் ஜாமீன் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக இருப்பதால் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றமும் மறுத்து விட்டது.

பின்னர், மீண்டும் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதால் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்தது. மேலும், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கை 3 மாதத்தில் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என கடந்த 2024 மார்ச் மாதம் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் 471 நாட்கள் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளிவர உள்ளார். மேலும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.