ETV Bharat / state

கோவையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்ல; உதவிப் பேராசியர் உள்பட 4 பேர் கைது! - sexually harasment - SEXUALLY HARASMENT

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாகக் கல்லூரி பேராசிரியர் மற்றும் மாணவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2024, 1:06 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு கோவையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, வெளியூர்களிலிருந்து தங்கிப் படிக்கும் மாணவர்களும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி பொள்ளாச்சி மருத்துவமனை சார்பாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழான ஒருங்கிணைந்த சேவை மைய (One Stop Centre) அலுவலர் கிருஷ்ணவேணி தலைமையிலான ஒருங்கிணைந்த சேவை மையக் குழுவினர் வால்பாறை அரசு கலைக் கல்லூரிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகச் சென்றுள்ளனர். அப்போது மாணவிகளுடன் ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா? படிக்கும் இடத்தில் அல்லது விடுதிகளில் ஏதேனும் பிரச்னை இருந்தால் எங்களிடம் கூறுங்கள் என மாணவிகளிடம் கேட்டதாகத் தெரிகிறது.

மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, சில மாணவர்கள் சோர்வாகக் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்ட போது, இந்த கல்லூரியில் பணியாற்றும் சில பேராசிரியர்கள் மற்றும் லேப் டெக்னீசியன் போன்றோர் தவறாக நடந்து கொள்வதும், அதற்காக முயல்வதும், வாட்ஸ்ஆப்பில் தவறான மெசேஜ் அனுப்புவதும் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குழுவினர், உடனடியாக இது தொடர்பாக பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் பொள்ளாச்சி காவல் ஆய்வாளர் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், கல்லூரியில் பணியாற்றி வந்த தற்காலிக உதவி பேராசிரியர்கள் சதீஷ்குமார், முரளி ராஜ், ராஜபாண்டி மற்றும் லேப் டெக்னீசியன் அன்பரசு ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவிக்கு வளைகாப்பு.. அழைப்பிதழ் கொடுக்க சென்ற நபர் விபத்தில் பலி; நண்பரும் உயிரிழந்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.