ETV Bharat / state

ரூ.582.95 கோடி வைத்துள்ள ஆற்றல் அசோக்குமார்.. ஈரோடு திமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு எவ்வளவு? - Aatral Ashok kumar assert - AATRAL ASHOK KUMAR ASSERT

Aatral Ashokkumar assert: ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அசோக்குமார், திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் ஆகியோர் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்த போது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தனர்.

அசோக்குமார் கே.இ.பிரகாஷ்
அசோக்குமார் கே.இ.பிரகாஷ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 8:46 PM IST

ஈரோடு: ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அசோக்குமார் போட்டியிடுகிறார். ஆற்றல் எனும் பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் அசோக்குமார், கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். பாஜகவில் ஓபிசி அணியின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த அசோக்குமார், கடந்த நவம்பர் மாதம் அதிமுகவில் இணைந்தார்.

ஆற்றல் அறக்கட்டளை மூலம் மலிவு விலை உணவகம், மருத்துவ சேவை, பள்ளிகள் மற்றும் கோயில் கட்டுமானப் பணி போன்ற பணிகளைச் செய்து வரும் அசோக்குமார், தற்போதைய மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ. சி.சரஸ்வதியின் மருமகன் ஆவார்.

இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ கோபால் சுன்கராவிடம், நேற்று அசோக்குமார் தாக்கல் செய்தார். இதோடு அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அவரது சொத்து மதிப்பு, கடன் மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தன்னை சமூக சேவகர் மற்றும் தொழிலதிபர் என அசோக்குமாரும், அவரது மனைவி கருணாம்பிகா குமார் கட்டுமான வடிவமைப்பாளர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

பிரமாணப் பத்திரத்தின்படி, அதிமுக வேட்பாளர் அசோக்குமாருக்கு ரூ.526 கோடியே 53 லட்சத்து 9,500 ரூபாய் அசையும் சொத்துக்கள் உள்ளன. இதில், வங்கிக் கணக்குகளில் ரூ.6.99 கோடி, 10.01 கிலோ நகை, கையிருப்பு ரூ.10 லட்சம் ஆகியவை அடங்கும். இத்துடன் குடும்ப சொத்து மற்றும் தனது சுய சம்பாத்திய சொத்து என மொத்தம் ரூ 56.95 கோடி அசையா சொத்துகள் உள்ளன. இதன்படி, வேட்பாளர் அசோக்குமாருக்கு மொத்தமாக ரூ.582.95 கோடி சொத்து உள்ளது என பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், தனக்கு சொந்த வாகனம் இல்லை என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள அசோக்குமார், ரூ.12 லட்சம் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல், இவரது மனைவி கருணாம்பிகா குமாருக்கு ரூ.47.38 கோடி அசையும் சொத்துக்கள், ரூ.22.60 கோடி அசையா சொத்துக்கள் என மொத்தம் ரூ.69.98 கோடி சொத்துக்கள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 10.60 கிலோ எடையுள்ள தங்க நகை மற்றும் கையிருப்பு ரூ.5 லட்சமும் அடங்கும்.

அதேபோல், அசோக்குமாரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், தனக்கு ரூ.4.89 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கே.இ.பிரகாஷிடம் ரூ.15 லட்சத்து 38 ஆயிரமும், அவரது மனைவி பி.கோகிலாவிடம் ரூ.3 லட்சமும் கையிருப்பு உள்ளது. வங்கிக் கணக்குகளில் கே.இ.பிரகாஷுக்கு ரூ.18 லட்சத்து 3 ஆயிரத்து 466 இருப்பு உள்ளது. கோகிலாவின் வங்கி கணக்குகளில் ரூ.15 லட்சத்து 12 ஆயிரத்து மற்றும் 788 இருப்பு உள்ளது.

பிரகாஷ் பெயரில் ரூ.5 லட்சம் மற்றும் 5.7 லட்சம் மதிப்பிலான 2 கார்களும், 2 மோட்டார் சைக்கிள்களும், கோகிலாவின் பெயரில் ரூ.50 லட்சம் மதிப்பிலான சொகுசு காரும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கே.இ.பிரகாஷிடம் 20 பவுன் நகையும், அவரது மனைவியிடம் 216 பவுன் நகையும், அவரது குடும்பத்தினரிடம் 28% பவுன் நகையும் உள்ளன. மொத்தமாக பிரகாஷிடம் ரூ.2 கோடியே 24 லட்சத்து 21 ஆயிரத்து 883 மதிப்பிலான அசையும் சொத்தும், அவரது மனைவியிடம் ரூ.1 கோடியே 78 லட்சத்து 55 ஆயிரத்து 400 மதிப்பிலான அசையும் சொத்தும் உள்ளது.

பிரகாஷ் பெயரில் ரூ.2 கோடியே 64 லட்சத்து 94 ஆயிரத்து 405 மதிப்பிலான நிலமும், மனைவி கோகிலாவின் பெயரில் ரூ.2 கோடியே 12 லட்சத்து 68 ஆயிரத்து 160 மதிப்பிலான நிலமும் உள்ளன. இதே போல் பிரகாஷ் பெயரில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 849 ரூபாயும், மனைவி பெயரில் 35 லட்சத்து 56 ஆயிரத்து 310 ரூபாயும் கடன் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈரோடு எம்பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி? - மருத்துவமனையில் வைகோ அளித்த விளக்கம்! - Vaiko

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.