ETV Bharat / state

சிறுதானியம் குறித்து விழிப்புணர்வு - 5 ஆயிரம் மாணவ மாணவிகள் இந்திய வடிவில் நின்று சாதனை! - குருஷேத்ரா ஐஏஎஸ் அகாடமி

Asia Book of Record: குடியரசு தின விழாவை முன்னிட்டு 5 ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகள் சிறுதானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு நிமிடத்தில் இந்திய வரைபட வடிவில் நின்று உலக சாதனை நிகழ்த்தி ஆசியா புக் ஆஃப் ரெகார்ட் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

Asia Book of Record
இந்திய வரைபடத்தின் வடிவில் நின்று சாதனை படைத்த பள்ளி மாணவர்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 5:48 PM IST

இந்திய வரைபடத்தின் வடிவில் நின்று சாதனை படைத்த பள்ளி மாணவர்கள்

சென்னை: நாட்டின் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, போதி சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் குருஷேத்ரா ஐஏஎஸ் அகாடமி (BODHI CHARITABLE TRUST & KURUKSHETRA IAS ACADEMY) இணைந்து 'அறம் விதைப்போம்' என்ற தலைப்பில் உலக சாதனை நிகழ்வு நடத்தப்பட்டது. சென்னை முகப்பேரில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சுமார் 25க்கும் மேற்பட்ட பள்ளியில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

அப்போது ஒரு நிமிடத்தில் இந்திய வரைபடத்தின் வடிவில் நின்று சிறுதானியம் விதைத்து உலக சாதனை நிகழ்த்தி ஆசிய புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு எம்பி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்ட ஆணையரின் உறுப்பினர் தீனதயாளன், ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வாசுகி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த குருஷேத்ரா ஐஏஎஸ் அகாடமி நிறுவனத்தின் இயக்குனர் வாசுகி வினோதினி கூறியதாவது, "சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவும், நாட்டில் பசி இல்லா உலகத்தையும், வறுமை இல்லா உலகத்தை கொண்டு வர வேண்டும் என்றால் கல்வியால் மட்டும் தான் சாதிக்க முடியும்.

அதற்காகத்தான் அறம் விதைப்போம் என்ற தலைப்பில் இப்படிப்பட்ட ஒரு மாபெரும் உலக சாதனை நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் 25க்கும் மேற்பட்ட பள்ளியிலிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்திய வரைபடத்தின் வடிவில் நின்று சிறு தானியங்களை ஒரு நிமிடத்தில் விதைத்து உலக சாதனை நிகழ்த்தி ஆசியா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.

இது சிறுதானியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வரும் சங்கதிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், இப்படிப்பட்ட ஒரு உலக சாதனை நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த உலக சாதனை ஆசியா புத்தகத்தில் இடம் பெற்று நிகழ்விடத்தில் அதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். வருங்காலத்தில் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு பேசியதாவது, "சிறுதானியங்கள் குறித்து இப்போதுள்ள மாணவ மாணவிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில், இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். உணவு பழக்க வழக்கங்கள் மாறியதன் காரணமாக ஹோட்டல் உரிமையாளர்களுக்கும், மருத்துவமனை சார்ந்த உரிமையாளர்களுக்கும், நல்ல வசதியாக இருந்து வருகிறது.

ஏனென்றால் பாஸ்ட் புட் (Fast Food) உணவுகள் அதிகமாக சாப்பிடுவதன் காரணமாக ஒன்று ஹோட்டல் உரிமையாளர்களுக்கு லாபம் ஏற்படுகிறது, மற்றொன்று மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களின் உரிமையாளர்களுக்கு லாபம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த இரண்டு தொழிலுமே நல்ல லாபத்தை ஈட்டி வருகிறது. எனவே இது போன்ற உணவு வகைகளை தவிர்த்து சிறுதானியங்களை சாப்பிட்டால் பல நூறு ஆண்டுகளுக்கு உயிர் வாழலாம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தங்கானூரில் களைகட்டிய சேவல் சண்டை..பொங்கலில் சேவல் சண்டை நடத்த அரசுக்கு கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.