ETV Bharat / state

சுழட்டி அடிக்கும் கனமழை.. மூடப்பட்ட சென்னை ஏர்போர்ட்.. ஒரே இடத்தில் குவிந்த 500-க்கும் மேற்பட்ட பயணிகள்..! - CHENNAI AIRPORT CLOSED

ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், 500க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

சென்னை ஏர்போர்ட் தற்காலிகமாக மூடல்
சென்னை ஏர்போர்ட் தற்காலிகமாக மூடல் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2024, 3:48 PM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் சூறைக்காற்றுடன் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வானில் வட்டமடித்து கொண்டு இருந்தன.

இதையடுத்துச் சென்னை விமான நிலையத்தில் உள்ள இரண்டு ஓடு பாதைகளிலும் மழை நீர் தேங்கியதால், விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் காலை முதல் இன்று மாலை வரை தற்காலிகமாக விமான சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து மற்ற விமான சேவைகளும் குறிப்பிட்ட நேரத்தில் விமானத்தை இயக்க முடியாத் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, சென்னை ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா இன்று மதியம் 12.30 மணி முதல் மாலை 7 மணி வரை மொத்தமாக விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டது. இதனால் சென்னை விமான நிலையத்திற்கு முன் கூட்டியே வருகை தந்த பயணிகள் அனைவரும் தற்போது விமான நிலைய வளாகத்திற்கு உள்ளேயே இருக்கைகளில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை குரோம்பேட்டை பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்...மழை நீடித்தால் தரை தளம் மூழ்கும் அபாயம்!

இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் ஒரே இடத்தில் அமர வைக்கப்பட்டுள்ளதால் கூட்ட நெரிசலாக காணப்படுகிறது. இதில் பெரும்பாலான பயணிகள் அனைவரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்களில் பயணிக்க வந்தவர்கள் என கூறப்படுகிறது.

மேலும், விமான நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை அந்தந்த தனியார் விமான சேவை நிறுவனங்கள் செய்து கொடுப்பதாக பயணிகளுக்கு உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் அனைவரும் சென்னை விமான நிலையத்தில் பல மணி நேரங்களாக தவித்து வருகின்றனர்.

இன்று இரவு 7:00 மணிக்கு மேல் வானிலை சீரான உடன் மீண்டும் வழக்கம் போல விமான சேவை இயங்கும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.