ETV Bharat / state

நெல்லை கல்குவாரிகளில் 700 கோடி முறைகேடு? அறப்போர் இயக்கம் வெளியிட்ட பகீர் தகவல்!

Mines corruption in Tirunelveli: நெல்லை கல்குவாரிகளில் 700 கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் எம்பி முதல் திமுக முக்கிய புள்ளி வரை தொடர்பு இருப்பதாக சென்னையைச் சேர்ந்த அறப்போர் இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Mines corruption in tirunelveli
நெல்லை கல்குவாரிகளில் 700 கோடி முறைகேடு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 3:56 PM IST

சென்னை: நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் சுமார் 700 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக சென்னையைச் சேர்ந்த அறப்போர் இயக்கம் பகிரங்க புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, “நெல்லை மாவட்டம் முழுவதும் சுமார் 54 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான குவாரிகள், முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் நடத்தி வரும் குவாரிகளாகும்.

குறிப்பாக, திமுகவைச் சேர்ந்த நெல்லை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் மற்றும் நெல்லை கிழக்கு மாவட்ட திமுகவின் தலைவர் கிரகாம்பெல் உள்பட திமுகவினருக்கு பல்வேறு குவாரிகள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில்தான், கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம், நெல்லை மாவட்டம் அடை மிதிப்பான் குளம் என்ற கிராமத்தில் இயங்கி வந்த கல்குவாரியில் பாறைகள் வெட்டி எடுக்கும்போது சரிவு ஏற்பட்டு பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிய ஆறு தொழிலாளர்களில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுமார் 10 நாட்களுக்கு மேலாக மீட்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், இச்சம்பவம் அப்போது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசின் விதிகளை மீறி, அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் அளவு பாறைகளை தோண்டியதால்தான் அந்த விபத்து ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து, நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள 54 குவாரிகளையும் மூடியுதுடன், அங்கு விதிமீறியது தொடர்பாக ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டது.

இதில் 53 குவாரிகளில் விதிமீறல் நடைபெற்று இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாய் அபராதம் விதித்தார், சேரன்மகாதேவி பகுதி துணை ஆட்சியர். இந்த சம்பவம் அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் எத்தனை கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது? குவாரி உரிமையாளர்கள் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை முழுமையாக செலுத்தினார்களா என்ற விவரங்களை வெளியிடாமலே வைத்திருந்தனர்.

இந்த சூழ்நிலையில்தான் சென்னையைச் சேர்ந்த அறப்போர் இயக்கத்தினர், நெல்லை கல்குவாரி விபத்தை மையப்படுத்தி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளனர். இது குறித்து அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடை மிதிப்பான் குளம் கல்குவாரி விபத்து ஏற்பட்டபோது, புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் நிர்மல் ராஜ் நெல்லை மாவட்டம் முழுவதுமுள்ள குவாரிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.

அதில், 53 குவாரிகளில் விதிமீறல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சேரன்மகாதேவி துணை ஆட்சியர் குவாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தார். இதில் அறப்போர் இயக்கம் சார்பில் 24 கல்குவாரிகளின் ஆணைகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளோம். அதன்படி, 24 குவாரிகளில் மட்டும் கிட்டத்தட்ட 50 லட்சம் கன மீட்டருக்கு அதிகமான சாதாரண கற்களும், 5.5 லட்சம் கன மீட்டர் அதிகமான கிராவலும் சட்ட விரோதமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

துணை ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்தவுடன், இயக்குனர் நிர்மல் ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஜெயகாந்தன் ஐஏஎஸ் துறை ஆணையரக நியமிக்கப்பட்டார். ஒருபுறம் 53 குவாரிகளில் விதிமீறல் நடைபெற்றதால் அனைத்து குவாரிகளையும் அப்போதைய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அதிரடியாக மூடினார். இது போன்ற விதிமீறலில் ஈடுபட்ட குவாரி உரிமையாளர்களிடம் இருந்து ராயல்டி மற்றும் அபராதம், மேலும் கனிம வளங்களுக்கான மொத்த விலையையும் மீட்க வேண்டும் என்பது சுரங்கங்கள் கனிமங்கள் 1957 சட்டத்தில் உள்ளது.

இந்த 24 குவாரிகளில் துணை ஆட்சியரால் விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை 262 கோடி ஆகும். இந்த ஆணையில் பிரச்னை இருந்தால், குவாரி உரிமையாளர்கள் முதலில் ஆட்சியரை அணுக வேண்டும். ஆனால், அவர்கள் நேரடியாக ஆணையர் ஜெயகாந்தனை அணுகி, அபராதத் தொகையை குறைக்கும்படி அழுத்தம் கொடுத்துள்ளனர். எனவே, ஜெயகாந்தன் 262 கோடியாக இருந்த அபராதத் தொகையை 13.8 கோடியாக குறைத்துள்ளார். இதன் மூலம் கனிமவளக் கொள்ளை மற்றும் ஊழலுக்கு அவர் துணை போனது தெரிய வந்துள்ளது.

நெல்லை கிழக்கு மாவட்ட திமுக தலைவரும், எஸ்.ஏ.வி குழும நிறுவனருமான கிரகாம்பெல்லுக்குச் சொந்தமான எஸ்.ஏ.வி மற்றும் அதனைச் சார்ந்த 4 குவாரிகளில் விதிக்கப்பட்ட அபாரதத் தொகை 60 கோடியாகும். ஆனால், ஜெயகாந்தன் அதை 3.7 கோடியாக குறைத்துள்ளார். இதேபோல் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்குச் சொந்தமான குவாரிகளிலும் விதிக்கப்பட்ட அபராதத் தொகையும் ஜெயகாந்தன் குறைத்துள்ளார்.

எனவே, ஒட்டுமொத்தமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 53 குவாரிகள் மற்றும் திருப்பூரில் ஒரு குவாரியையும் சேர்த்து, 700 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தலையிட்டு 700 கோடி ரூபாய் ஊழல் பணத்தை மீட்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராமனிடம் கேட்டபோது, "கல்குவாரி விவகாரத்தில் அப்போதைய ஆட்சியர் விஷ்ணு தனது பணியை முறையாக செய்துள்ளார். ஆனால், அப்போது துறை ஆணையராக இருந்த ஜெயகாந்தன், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி துணை ஆட்சியரால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை குறைத்துள்ளார். இதன் மூலம் அரசுக்கு சுமார் 700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்துள்ளோம். அடுத்த கட்டமாக நீதிமன்றத்திலும் முறையிடுவோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மெத்தனமாக இருந்து விடாதீர்கள்!"- ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை! கலக்கத்தில் நிர்வாகிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.