ஆரணி: ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 5,00,099 வாக்குகள் பெற்று 2,08,766 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 2,91,333 வாக்குகளும், பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 2,36,571 வாக்குகளும், நாதக வேட்பாளர் பாக்கியாலட்சுமி 66740 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவினர்.
வ.எண் | வேட்பாளர்கள் | கட்சி பெயர் | பெற்ற வாக்குகள் |
---|---|---|---|
1. | தரணிவேந்தன் (வெற்றி) | திமுக | 5,00,099 |
2. | கஜேந்திரன் | அதிமுக | 2,91,333 |
3. | கணேஷ்குமார் | பாமக | 2,36,571 |
4. | பாக்கியலட்சுமி | நாதக | 66,740 |
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் தரணி வேந்தன், அதிமுக சார்பில் கஜேந்திரன், பாமக சார்பில் கணேஷ்குமார், நாதக சார்பில் பாக்யலட்சுமி உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் ஆரணி தொகுதியில் மொத்தம் 11,33,520 (75.76%) வாக்குகள் பதிவாகின.
இன்று வாக்குகள் எண்ணப்படும் நிலையில், 3239 வாக்குகள் பெற்று திமுக முன்னிலை வகிக்கிறது. அதேபோல, 2831 வாக்குகளுடன் அதிமுக இரண்டாம் இடத்திலும், 1491 வாக்குகளுடன் பாமக மூன்றாம் இடத்திலும் உள்ளது.
2019 தேர்தலில் வென்றது யார்?: காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.கே. விஷ்ணுபிரசாத் 6,17,760 வாக்குகள் பெற்றதுடன் 2,30,806 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏழுமலை 3,86,954 வாக்குகள் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர் செந்தமிழன் 46,383 வாக்குகளும், நாதக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தமிழரசி 32,409 வாக்குகளும் பெற்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு லோக்சபா தேர்தல் 2024; நேரடியாக களமிறங்கியுள்ள திமுக! ஆரணி தொகுதி யாருக்கு? - Arani Lok Sabha Election 2024