ETV Bharat / state

கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர குவியும் விண்ணப்பங்கள்! - விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன? - veterinary medicine admission

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 9:01 PM IST

tn veterinary medicine application: கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர ஜூன் மாதம் 21ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

tamil nadu veterinary university
tamil nadu veterinary university (Credit - Etv Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டபடிப்புகளான கால்நடை மருத்துவப்படிப்பில் சேருவதற்கு 9,039 மாணவர்களும், பிடெக் படிப்பில் சேருவதற்கு 1,872 மாணவர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர் எனவும், வரும் 21ந் தேதி் வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பாராமரிப்பு பட்டப்படிப்பில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டுரோடு கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் 80 இடங்களும், தேனி வீரப்பாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்களும் என 660 இடங்கள் உள்ளன.

உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பிடெக்) கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்களும், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பிடெக்)40 இடங்களும், கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக்கல்லூரியில் பால்வளத் தொழில்நுட்ப பட்டபடிப்பில் 20 இடங்களும் உள்ளன. இதில் கடந்த ஆண்டைப் போலவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்தப் படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் சேர https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் சேருவதற்கு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜூன் 3 ந் தேதி முதல் 13 ந் தேதி வரையில் கால்நடை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு ( BVSc & AH) 9 ஆயிரத்து 39 மாணவர்களும், பிடெக் படிப்புகளில் சேர்வதற்கு 1872 மாணவர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் தமிழ்நாடு மாணவர்கள் ஜூன் 21ந் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

2023-24ம் கல்வியாண்டில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டபடிப்பிற்கு 18,752 மாணவர்களும், தொழில்நுட்ப பட்டப்படிப்பில் சேர 3,783 பேர் என 22,535 விண்ணப்பம் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்ப்புதல்வன் திட்டம்; ஆகஸ்ட் முதல் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000 - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.