சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட ஏழு பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை என கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இதனை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கவனத்தில் கொள்ளாமல் மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு கடந்து வந்த பாதை..!