ETV Bharat / state

"தங்கள் ஊரின் பெருமையை அறிய மாணவர்கள் உதவ வேண்டும்" - தொன்மை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை!

மாணவர்கள் தாங்கள் வசிக்கும் ஊர்களின் தொன்மையையும், அதன் மரபுப் பெருமையும் அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்ட வேண்டும் என்று தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜகுரு வேண்டுகோள் வைத்தார்.

Ramnad  Antiquities Conservation Forum  தொன்மை பாதுகாப்பு மன்றம்  Kulathur Govt High School
தொல்லியல் குறித்து மாணவர்களுக்கு விளக்கும் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2024, 11:32 AM IST

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் 'தொல்லியல் கருத்தரங்கம்' நேற்று (அக்.24) நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஹரிஹர கிருஷ்ணன் தலைமை தாங்கிய இந்நிகழ்வில், சமூக அறிவியல் ஆசிரியர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மேலும் 10ஆம் வகுப்பு மாணவர் விஷ்வா வரவேற்றார். தொடர்ந்து, மன்றச் செயலரும், கணித ஆசிரியருமான சி.பால்துரை, ஊரின் பழமையைப் பாதுகாப்பதில் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளரும், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியருமான வே.ராஜகுரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது, "ஒவ்வொரு ஊரிலும் மக்கள் வாழ்ந்து அழிந்துபோன தொன்மையான மேடுகள், இடங்கள் இருக்கும்.

இதையும் படிங்க: “இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்” - தவெக தலைவர் விஜய் கடிதம்!

அதேபோல் குளம், கண்மாய், கோயில் போன்ற இடங்களில் பழமையான கல்வெட்டுகள் காணப்படும். இத்தகைய தொல்லியல் தொடர்புகளை அதன் மரபுப் பெருமைகளை பள்ளி மாணவர்கள் கண்டறிந்து தங்கள் ஊரின் பழமையை அறிய உதவ வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

பின்னர், தொல்லியல் குறித்து மாணவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். தொடர்ந்து, அகழாய்வு, மேற்பரப்பாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள், கல்வெட்டுகளின் படங்கள் மூலம் தொல்லியல் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார். இறுதியாக ஒன்பதாம் வகுப்பு மாணவர் ரித்திக் நன்றியுரை தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.