ETV Bharat / state

“அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால்..” - அண்ணாமலை கூறுவது என்ன? - Annamalai about AIADMK

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 5:45 PM IST

Updated : Jun 5, 2024, 10:48 PM IST

BJP Annamalai Press Meet: பாஜக - அதிமுக பெற்ற வாக்குகளை மொத்தமாக கூட்டி பார்த்தால் 31 இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெற்று இருக்க முடியும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இருந்திருந்தால் திமுக கூட்டணியை விட 30 அல்லது 31 இடங்களில் வாக்குகள் அதிகம் பெற்று இருப்போம் என்பது ஒரு பேச்சாக அமையாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

BJP TN President Annamalai Photo
BJP TN President Annamalai Photo (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: 18வது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜீன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும், 7 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணும் பணியானது நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது.

தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக தலைமையிலான கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி என மூன்று மிகப்பெரிய கூட்டணிகள் தமிழகத்தில் போட்டியிட்டன. நேற்று (ஏப்.4) வெளிவந்த முடிவின் படி, இந்தியா முழுவதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக பெரும்பான்மை பெற்று இருந்தாலும், தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணி, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையிலான கூட்டணி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.

இது தொடர்பாக தற்போது அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழக மக்கள் கொடுத்த தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம். தமிழகத்தில் பாஜக கட்சி வளர்ந்துள்ளது. இந்திய அளவில் பல இடங்களில் வெற்றி பெறுவோம் என நினைத்தோம், வெற்றி பெறவில்லை. வருகின்ற காலத்தில் களத்தைச் சரியாக புரிந்து கொள்வோம்" என தெரிவித்தார்.

அதிமுகவுடன் இணைந்து பாஜக போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற முடிந்து இருக்குமா? என்ற செய்தியாளர் கேள்விக்கு, "தோராயமாக தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியில் பாஜக - அதிமுக பெற்ற வாக்குகளை மொத்தமாக கூட்டிப் பார்த்தால் 31 இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெற்று இருக்க முடியும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இருந்திருந்தால் திமுக கூட்டணியை விட 30 அல்லது 31 இடங்களில் வாக்குகள் அதிகம் பெற்று இருப்போம் என்பது ஒரு பேச்சாக அமையாது.

தேர்தலுக்கு முன்பு தமிழக மக்களுக்கு மூன்று வாய்ப்பு இருந்தது. மக்கள் ஒவ்வொரு கூட்டணியைப் பார்த்துத் தான் வாக்குகள் அளிக்கின்றனர். வாக்கு அளித்த பிற அவர்களுடன் கூட்டணி வைத்து இருந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வி யுகத்தின் அடிப்படையிலான கேள்வி. இருவரும் இணைந்து இருந்தால் 30 அல்லது 31 தொகுதி வெற்றி பெற்று இருக்கலாம் என்பதைத் தாண்டி ஏதோ காரணத்திற்காகச் சேரவில்லை என்பது தான் உண்மை. மேலும், இது தான் மக்கள் மன்றத்திலிருந்தது". என தெரிவித்தார்.

அதிகப்படியான எதிர்பார்ப்பில் அண்ணாமலை உள்ளாரா என்ற கேள்விக்கு, "தற்போது நான் அதிகப்படியான எதிர்பார்ப்பில் இருக்கிறேன். 2026ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப் போகிறோம். அது தான் இலக்கு, ஏனென்றால் அப்படி தான் தலைவர் இருக்க முடியும். அப்படி தான் பணி செய்ய முடியும்" என தெரிவித்தார்.

6 தொகுதிகளில் அதிமுகவை பாஜக மூன்றாம் இடத்திற்கு தள்ளியுள்ளது எங்களுக்கு பெரிய வெற்றியே எனவும், திமுக 40 தொகுதிகளிலும் பெரும் வெற்றி பெற்றதாக கூறுகின்றனர். ஆனால், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் வாக்கு சதவீதத்தைக் காட்டிலும் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வாக்கு சதவீதம் குறைந்து இருப்பதாக அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.

தோல்விக்கு பொறுப்பேற்ற மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கனிமொழி தெரிவித்தது குறித்து கேள்விக்கு, "என்னுடைய தந்தை கருணாநிதியாக இருந்தால் நானும் வெற்றி பெற்றிருப்பேன். கனிமொழி பாஜகவில் சேர தயாராக இருந்தால் தலைவர் பதவியில் இருந்து விலகுவது குறித்து பரிசீலிக்கலாம் என தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி பணம் கொடுக்காமல் நேர்மையுடன் இந்தத் தேர்தலில் வாக்குகளை பெற்றிருக்கின்றார்கள் அவர்களை பாராட்டுவதாகவும், இதற்கு முன்பு மத்தியில் ஏற்கனவே வாஜ்பாய் தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் வெற்றிகரமாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடத்தியுள்ளது. எனவே, இந்த முறை சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆதரவுடன் வெற்றிகரமாக ஆட்சி நடத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: கிங் மேக்கர் யார்? சந்திரபாபு நாயுடுவா? நிதிஷ்குமாரா? - பாஜக கூட்டணியில் நடப்பது என்ன? - Nitish Kumar And Chandrababu Naidu

Last Updated : Jun 5, 2024, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.