ETV Bharat / state

சென்னையில் இந்தியாவின் முதல் ட்ரோன்களுக்கான ஷோரூம் - அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் திறப்பு... - Garuda drone showroom in Chennai - GARUDA DRONE SHOWROOM IN CHENNAI

Garuda Drone showroom in Chennai: சென்னையில் நிறுவப்பட்டுள்ள கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் டிரோன்களுக்கான பிரத்தியேக ஷோரூமை, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் திறந்து வைத்தார்.

கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஷோரூம் திறப்பு விழா
கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஷோரூம் திறப்பு விழா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 7:17 PM IST

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி (Video Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் ட்ரோன்கள் விற்பனை செய்வதற்காக இந்தியாவின் முதல் நேரடி விற்பனை நிலையம் (ஷோரூம்) கருடா ஸ்பேஸ் டெக்னாலஜி நிறுவியுள்ளது. இந்த ஷோரூமை இன்று (திங்கட்கிழமை) அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்துவைத்து, 'ட்ரோனி ட்ரோன்கள்' என்று அழைக்கப்படும் சிறிய வகை ட்ரோன்களை அறிமுகப்படுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கூறியதாவது, "அக்னி குரூப் ஆப் கம்பெனி மற்றும் அவர்களது கல்லூரி மூலம் பல கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. அந்த வகையில், இன்று ட்ரோனி ட்ரோன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருட்கள் நேரடியாகப் பயனர்களைச் சென்று சேருவதில்லை, ட்ரோன்களுக்கென இந்தியாவில் முதல்முறையாகக் கருடா ஏரோ ஸ்பேஸ் ஷோரூம் அமைத்துள்ளார்கள். இது ட்ரோன்கள் வளர்ச்சிக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கு இது கண்டிப்பாக உறுதுணையாக இருக்கும்.

ட்ரோன் தொழில்நுட்பம் இந்தியாவில் அதிகம் வருவதற்கு இந்த தனிப்பட்ட ட்ரோன் ஷோரூம், ஒரு முதல் அடியாக இருக்கும். விவசாய மக்களுக்கு மட்டுமின்றி பாதுகாப்பு காரணங்களுக்காக, பொதுமக்களுக்கும் உபயோகிக்கும் வகையில் பல வகைகளில் ட்ரோன்கள் தயாரிக்கப்படுகின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ME ட்ரோன் டெக்னாலஜி படிப்பு விரைவில் கொண்டு வரப்படும். மெக்கானிக்கல் படிப்பிலிருந்து எப்படி ஆட்டோ மொபைல் வந்ததோ, அதேபோல் ஏரோ ஸ்பேஸ் டெக்னாலஜி படிப்பில் இருந்து ட்ரோன் குறித்த படிப்பு வரும். அப்போது, அதற்கான வேலை வாய்ப்பு அதிக அளவில் இருக்கும்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனர் ஜெயபிரகாஷ், "தற்போது அறிமுகப்படுத்தியுள்ள ட்ரோனி ட்ரோன்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்த ட்ரோன்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தவகையில், எங்கெல்லாம் பயன்படுத்தக்கூடாது என்ற தடை உள்ளதோ, அந்த பகுதிகள் தவிர மற்ற இடங்களில் எந்த வித லைசன்ஸ் இல்லாமல் யார் வேண்டுமானாலும் இந்த ட்ரோனி ட்ரோன்களை பயன்படுத்தலாம்.

குஜராத் பல்கலைக்கழகத்தில் இணைந்து கருடா ஏரோஸ்பேஸ் ட்ரோன் படிப்பைக் கொண்டுவந்துள்ளது. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் கொண்டு வர முயற்சி எடுக்கிறோம். அடுத்த 10 ஆண்டுகளில் போக்குவரத்து, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் ட்ரோன்களின் பயன்பாடு இருக்கும்.

மேலும், இந்த துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது, அடுத்த 10 ஆண்டுகளில் இன்னும் வேகமாக வளரும் என்று நம்புகிறோம். மனிதர்கள் ட்ரோன்கள் மூலம் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிகளுக்குச் செல்வது குறித்தும் முயற்சி எடுத்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கூடுதல் பணம் வசூலிப்பு; ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.