ETV Bharat / state

வருங்கால வைப்பு நிதி விவகாரம்; அண்ணா பல்கலை மேல்முறையீடு! - Anna University PF Issue

Madras High Court: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பாக்கி 2 கோடியே 44 லட்சம் ரூபாயில், 30 சதவீதத்தை செலுத்தும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

High Court
சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tami Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 9:17 PM IST

சென்னை: கடந்த 2006 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் கோவை உள்ளிட்ட இடங்களில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் துவங்கப்பட்டன. 2012ஆம் ஆண்டு இந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் அனைத்தும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன.

இந்நிலையில், கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியைச் செலுத்தவில்லை என 2019ஆம் ஆண்டு புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம், 2 கோடியே 44 லட்சம் ரூபாயைச் செலுத்தும்படி கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 2 கோடியே 44 லட்சம் ரூபாயில் 30 சதவீத தொகையை ஆறு வாரங்களில் டெபாசிட் செய்யும்படி, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில், இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயண பிரசாத் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தனி நீதிபதி உத்தரவின்படி, வருங்கால வைப்பு நிதி பாக்கியில் 30 சதவீதமான 73 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை செலுத்தும் நிலையில், பல்கலைக்கழகத்தின் நிதி நிலை இல்லை எனவும், தற்போதைய நிலையில் 10 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்த முடியும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், மனு நகலை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிய ஆணையர் தரப்புக்கு வழங்கும்படி அண்ணா பல்கலைக்கழக தரப்புக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் உயர்வு: 3 ஆண்டுகளில் இல்லாத உச்சம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.