ETV Bharat / state

“புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒரு போதும் ஏற்காது”.. அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்! - Anbil Mahesh on NEP 2020

Anbil Mahesh Poyyamozhi: புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது”

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 5:45 PM IST

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி: தமிழக பாடநூல் கழகம் சார்பாக வெளியிடப்படும் அனைத்து புத்தகங்களையும், தமிழகம் முழுவதும் உள்ள இடங்களில் விற்பனைக்கு கொண்டு செல்லும் வகையில், திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள ராசி பப்ளிகேஷன், சுமதி பப்ளிகேஷன் ஆகிய இரு புத்தகக் கடைகளின் ஸ்டால்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பாக பல்வேறு நூல்களை மொழி பெயர்த்துள்ளோம். பிற மாநிலங்களைச் சார்ந்த நூல்கள் உள்பட 350க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளோம்.

மொழி பெயர்த்துள்ள நூல்களை குறைந்தது 100 இடங்களுக்காவது கொண்டு சென்று, ஸ்டால்கள் அமைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். பொதுமக்கள் டிபிஐ (DPI) வளாகத்திற்கு வந்து நூல்களை வாங்குவதைக் காட்டிலும், புதிது புதிதாக வரும் நூல்களை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என ஆசைப்பட்டோம். குறிப்பாக, யாரும் பார்த்திராத வ.உ.சியின் வாழ்க்கை வரலாறு புகைப்படங்களை தொகுப்பாக கொண்டு நூலாக வெளியிட்டுள்ளோம்.

சென்னையில் ஹிக்கிம்பாதம்ஸ் புத்தக நிலையத்தில் ஸ்டால் அமைத்துள்ளோம். அடுத்ததாக, தமிழ்நாட்டில் பழமை வாய்ந்த புகழ்பெற்ற திருச்சியின் சிங்காரத்தோப்பு பகுதியில் ராசி மற்றும் சுமதி புத்தக நிலையங்களில் 2 ஸ்டால்களை அமைத்துள்ளோம். இதேபோல், தமிழகம் முழுவதும் 100 இடங்களில் கொண்டு செல்ல உள்ளோம்.

புதிய கல்விக் கொள்கை: புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. மாநில கல்விக் கொள்கையை வகுக்க கல்வித்துறை நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு தரவேண்டிய மூன்றாவது, நான்காவது தவணை 1,200 கோடி மட்டுமல்ல, அடுத்த ஆண்டு தர வேண்டிய ரூ.3 ஆயிரத்து 800 கோடியையும் மத்திய அரசு தொடர்புபடுத்துகின்றனர். அமைச்சர் என்பதைத் தாண்டி திமுககாரனாக கண்டிப்பாக புதிய கல்விச் சட்டத்தை எதிர்ப்பேன்.

மத்திய அரசின் நவீன பள்ளிகள் தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளோம். அதற்காக நாங்கள், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம் என்று அர்த்தமாகாது. நம்முடைய மாநிலத்திற்கு என்ன தேவையோ அதன்படி கல்வித் திட்டம் உருவாக்கியுள்ளோம்.

பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலை கொண்டு வர வேண்டியதுதான் எங்களுடைய எண்ணம். அதை நோக்கித்தான் நாங்கள் செயல்படுகிறோம். எங்களுடைய நிலைப்பாட்டில் இருந்து மாற்று கொள்கைக்கு செல்வதாக யாரும் எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதை நான் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் கூறினார்.

இதையும் படிங்க: தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் என்ன? இந்தியா முழுவதும் இன்று முதல் அமலாகும் கட்டுப்பாடுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.