ETV Bharat / state

புதுக்கோட்டையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை? நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை!

புதுக்கோட்டையில் கள்ளச்சந்தை மது விற்பனை அதிகரித்திருப்பதாகவும், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TASMAC
கள்ளச்சந்தை மது விற்பனை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

புதுக்கோட்டை: தமிழகத்தில் அரசு மதுபானக் கடைகள் பகல் 12 முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசின் விதிகளை மீறி டாஸ்மார்க் கடை அருகே உள்ள தனியார் பார்களில் அதிகாலை முதலே கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், புதுக்கோட்டை திலகர் திடல் பகுதியில் உள்ள மதுபானக் கடை அருகே அமைந்திருக்கும் பார்களிலும் மது விற்பனை அதிகம் நடைபெற்று வருவதாகவும், இதனால் அப்பகுதியில் மதுப்பிரியர்கள் கூட்டம் தினமும் அதிகமாக உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

கள்ளச்சந்தை மது விற்பனை (Credits - ETV Bharat Tamil Nadu)

இதேபோன்று, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள இரண்டு அரசு மதுபானக் கடை பார்களில் கள்ளத்தனமாக இணைய வழி பணப் பரிவர்த்தனையைப் பயன்படுத்தி மது விற்பனை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஈரோட்டில் குடிபோதையில் காவலர்களை தாக்கிய இருவர்.. நடுரோட்டில் நடந்த ரகளை!

இதுமட்டுமல்லாது, மதுப்பிரியர்களுக்கு வசதியாக, தண்ணீர், தண்ணீர் கப், விதவிதமான சைடிஷ்களும் விற்பனை செய்யப்படுவதாகவும், சாதாரண விலைக்கு விற்கப்படும் மது பாட்டில் ஒன்று ரூ.70 முதல் 100 ரூபாய் வரையில் அதிகமாக வசூல் செய்யப்படுவதாகவும் கூறுகின்றனர்.

இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் போன்ற முக்கியமான இடங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை விடுப்பதோடு, காவல்துறை கள்ளச்சந்தை மது விற்பனையை கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் சமுக ஆர்வலர்கள்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.