ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு - அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்! - AMMK TTV Dhinakaran

AMMK in BJP Alliance: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேர்தலைச் சந்திக்கவுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ammk-general-secretary-ttv-dhinakaran-has-announced-unconditional-support-to-bjp
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு - அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 6:01 PM IST

திருச்சி: 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளது.

அதிமுகவும், பாஜகவும் கூட்டணியை இறுதி செய்வதற்காக தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக கூட்டணியில் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும், அமமுக கோரிக்கைகளை பாஜகவுக்கு அளித்துள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

மேலும், தேனி, திருச்சி, சிவகங்கை, தென்சென்னை உள்ளிட்ட 5 தொகுதிகளைப் பெறத் திட்டம் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்னதாக பாஜக கூட்டணியில் போட்டியிடுவதாகச் சமக தலைவர் சரத் குமார் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.