ETV Bharat / state

அமமுக தலைமை அலுவலகம் இடப்பிரச்சனை விவகாரம்.. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் அளித்த விளக்கம் - ammk head office issue

அமமுக தலைமை அலுவலகம் இடப்பிரச்னை குறித்த தகவல் அடிப்படை ஆதாரமின்றி பரப்பப்பட்டுள்ளது எனவும், நான் அதிமுகவில் இணைவதாக பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே என அமமுக துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன் தெரிவித்துள்ளார்.

அமமுக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன்
அமமுக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2024, 5:19 PM IST

சென்னை: சென்னை, ராயப்பேட்டை அமமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் அமமுக துணை பொதுச்செயலாளருமான செந்தமிழன் அமமுக தலைமை அலுவலகத்திற்கு வாடகை பாக்கி வைத்துள்ளதாக செய்தி வெளிவந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அமமுக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது பேசிய அவர், "நேற்று அமமுக தலைமை அலுவலகம் பற்றி சில பத்திரிகையில் செய்தி வெளியானது. எங்கள் கட்சியின் பொருளாளர் இது தொடர்பாக மறுப்பு தெரிவித்தார். எங்கள் பொதுச்செயலாளர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இது போன்று ஒரு செயலை செய்து வருகிறார்கள். அது தொடர்பாக இன்று தெளிவுப்படுத்த உள்ளேன்.

அமமுக கட்சியாக தொடங்கும் போது அசோக் நகரில் இருந்த தலைமை அலுவலகம் ராயப்பேட்டைக்கு மாற்றப்பட்டது. அமமுகவில் இருந்த பொன்.முருகேசன் அவரின் விருப்பத்தின்பேரில், ராயப்பேடையில் தலைமை அலுவலகம் மாற்றப்பட்டது.

இதையும் படிங்க : "மகாவிஷ்ணு விஷயத்தில் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு ஏன் இவ்வளவு சீற்றம்?" - டிடிவி தினகரன் கேள்வி!

2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அமமுக தலைமை அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தத்தில் உள்ளது. வாடகையோ, மின்சார கட்டணமோ இதுவரைக்கும் நிலுவையில் இல்லை. அமமுக தலைமை அலுவலகம் குறித்தான இடப்பிரச்னை குறித்த தகவல் அடிப்படை ஆதாரமின்றி பரப்பப்பட்டுள்ளது.

பத்திரிகைகளில் வெளியான தகவலை பரப்பியவர்கள் மீது தேவையேற்பட்டால் அவதூறு வழக்கு தொடருவோம். தற்போது இருக்கும் தலைமை அலுவலகம் உள்ள கட்டடத்தின் ஒப்பந்தம் முடிய இருப்பதால் விரைவில் புதிய தலைமை அலுவலகம் தொடர்பான தகவலை தெரிவிக்கிறோம். நான் அதிமுகவில் மீண்டும் இணைவதாக தொடர்ந்து வதந்திகள் பரப்பப்படுகிறது. அத்தகைய தகவல்கள் அனைத்தும் வதந்திகள் தான்" என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அமமுக பொருளாளர் எஸ்.கே.செல்வம், மாவட்ட செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.