ETV Bharat / state

சென்னையில் பரவலாக கனமழை.. 14 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என அறிவிப்பு..! - CHENNAI RAINS

சென்னையில் இன்று மதியம் திடீரென பெய்த கனமழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. இந்த மழை மாலை 4 மணி வரை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பெய்த மழை
சென்னையில் பெய்த மழை (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2024, 2:20 PM IST

சென்னை: தெற்கு ஆந்திரா கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று மாலை 4 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: விளையாட்டுத் திடல்கள் தனியாருக்கு டெண்டர் விட்டால் என்னவாகும்? மாமன்ற உறுப்பினர்கள் கூறுவது என்ன?

இந்நிலையில், இன்று மதியம் 12 மணியளவில் சென்னையின் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மயிலாப்பூர், மந்தவெளி, அண்ணா சாலை, தி.நகர், சேத்துப்பட்டு, எழும்பூர், சேப்பாக்கம், ராயபுரம் ,வில்லிவாக்கம், கீழ்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அண்ணாநகர் 9 செமீ, மணலி புதுநகர், அமைந்தகரை தலா 9 செமீ, கொளத்தூர், பெரம்பூர் தலா 6 செமீ, நுங்கம்பாக்கம் 5 செமீ, வடப்பழனி 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் காலை முதலே சற்று வெயில் குறைந்து திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால், கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கத்தினால் இருந்த சென்னை தற்போது பெய்து வரும் மழையினால் குளிர்ந்துள்ளது. மேலும், தற்போது பெய்து வரும் மழை மாலை 4 மணி வரை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.