ETV Bharat / state

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிப் பகிர்வு: விசிக மது ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம்! - VCK Resolutions

"மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதலாக நிதியைப் பகிர்ந்தளிக்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மது ஒழிப்பு மாநாட்டில் தீர்மானங்களை வாசித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
மது ஒழிப்பு மாநாட்டில் தீர்மானங்களை வாசித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2024, 7:48 PM IST

கள்ளக்குறிச்சி: மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிப் பகிர்வை ஒன்றிய அரசு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது - போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இன்று மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்க திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில் கூட்டணி கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இதில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வாசித்தார். அவை வருமாறு:

1. அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 47-ல் கூறியுள்ளவாறு மதுவிலக்கை தேசியக் கொள்கையாக வரையறுக்கவும் சட்டமியற்றவும் வேண்டும்.

2. மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்கிட வேண்டும்.

3. மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும்.

4. மதுவிலக்கு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும்.

5. தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக, மதுபானக் கடைகளை மூடுவதற்குரிய கால அட்டவணையை அரசு அறிவித்திட வேண்டும்.

6. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

இதையும் படிங்க: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; அமாவாசை நாளில் அரசு அதிரடி உத்தரவு!

7. மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பரப்பியக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.

8. குடி நோயாளிகளுக்கும் போதை அடிமை நோயாளிகளுக்கும் நச்சு நீக்க சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் அவற்றுக்கான மையங்களை உருவாக்க வேண்டும்.

9. மது மற்றும் போதை அடிமை நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திட வேண்டும்.

10. டாஸ்மாக் எனும் அரசு நிறுவனத்தின் மது வணிகத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கிட வேண்டும்.

11. மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதலாக நிதியைப் பகிர்ந்தளிக்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

12. மதுவிலக்குப் பரப்பியக்கத்தில் அனைத்து தரப்பு சனநாயக சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும்.

ஆகிய தீர்மானங்களை திருமாவளவன் மேடையில் வாசித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.