ETV Bharat / state

தீபாவளிக்கு ட்ரெயினு, பஸ்னு அடுச்சு புடுச்சு ஊருக்கு போகாதீங்க.. பிளைட்ல ஜம்முன்னு போங்க!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தீபாவளி பண்டிகை காலத்தை ஒட்டி சென்னை - பெங்களூர் உள்ளிட்ட சில உள்நாட்டு வழித்தடங்களில் சலுகை பயண கட்டணங்களை அறிவித்துள்ளது.

கோப்புப்படம் மற்றும் ஏர் இந்தியா விமானம்
கோப்புப்படம் மற்றும் ஏர் இந்தியா விமானம் (Credits - ETV Bharat Tamil Nadu and Air India Express 'X' page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2024, 1:50 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பொதுமக்களுக்கு புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் ஆகியவை நினைவுக்கு வந்தாலும், மறுபுறம் பணி மற்றும் கல்வி போன்ற காரணங்களால் வெவ்வேறு ஊர்களில் தங்கியிருப்பவர்கள் தீபாவளி விடுமுறைக்கு அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்லுவது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அதன் அடிப்படியில், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக, சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பொதுமக்கள் ரயில், பேருந்து உள்ளிட்டவைகள் மூலம் பயணித்து வருகின்றனர். அந்தவகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லுவோருக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதிலும் குறிப்பாக இந்த ஆண்டு தமிழக அரசு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில், தீபாவளிக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தீபாவளி பண்டிகை காலத்தை ஒட்டி சென்னை- பெங்களூர், கொச்சி- பெங்களூர், கவுகாத்தி-அகர்தலா, விஜயவாடா-ஹைதராபாத் உள்ளிட்ட சில வழித்தடங்களில் சலுகை பயண கட்டணங்களை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: தீபாவளி எண்ணெய் குளியல்..காய்ச்சும் முறையும் பயன்படுத்தும் முறையும் இப்படி தான்!

அதன்படி, இந்த வழித்தடங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணம் செய்ய இம்மாதம் 27ஆம் தேதி வரையில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு சலுகை கட்டணம் ரூ.1606 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏர் இந்தியா இணையத்தளம் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு, ரூ.1,456 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாது, இம்மாதம் 27 ஆம் தேதிக்குள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சென்னை - பெங்களூர் வழித்தடம் உள்ளிட்ட குறிப்பிட்ட விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் தங்கள் சலுகை கட்டண பயணத்தை நவம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரையில் 40 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இந்த குறைந்த சலுகை கட்டண பயணத்தின் போது பயணி ஒருவர் 3 கிலோ எடையுடைய உடைமைகளை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் என்றும், கூடுதலாக 15 கிலோ வரையிலான பொருட்களை எடுத்துச் செல்வதற்கு ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.