ETV Bharat / state

தேர்தல் முன்பகை காரணமா? அதிமுகவினரைத் தாக்கியதாக திமுக பேரூராட்சி தலைவர் மீது குற்றச்சாட்டு! - AIADMK members attacked

AIADMK members Allegations: திண்டுக்கல் அருகே தேர்தல் முன்பகை காரணமாக திமுக அகரம் பேரூராட்சித் தலைவர், அதிமுகவினரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 3:20 PM IST

அதிமுகவினரைத் தாக்கியதாக திமுக பேரூராட்சி தலைவர் மீது குற்றச்சாட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்த, அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி கிராமத்தில், முன்பகை காரணமாக அதிமுகவைச் சேர்ந்த குழந்தை ராஜமாணிக்கம், சவரிமுத்து, ஞானமணி ஆகிய 3 பேரை அகரம் பேரூராட்சி திமுக தலைவர் நந்தகோபால் என்ற கருத்த மணி, தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து மூவரையும் வீடு புகுந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அப்போது வீட்டில் இருந்த பெண்களையும் தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மூவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து, திமுக தலைவர் நந்தகோபாலை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பி முற்றுகையிட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர், நந்தகோபால் தன்னுடைய ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு, அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மூன்று பேரையும் அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: தேர்தலின் போது திமுக பிரமுகரை தாக்கிய போலீசார் - கோவையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.