ETV Bharat / state

"டிடிவி தினகரன் அரசியலில் அனாதை ஆகிவிட்டார்" - அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு! - AIADMK Kamaraj - AIADMK KAMARAJ

AIADMK Kamaraj: டிடிவி தினகரன் அரசியலில் அனாதை ஆகிவிட்டார் எனவும், வேறு வழியில்லாமல் பாஜவுடன் சேர்ந்துள்ளார் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Thanjavur
தஞ்சாவூர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 4:56 PM IST

"டிடிவி தினகரன் அரசியலில் அனாதை ஆகிவிட்டார்" - அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சார்பில் வேட்பாளர் சிவநேசன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், முரசு சின்னத்தில் போட்டியிடும் சிவநேசனுக்கு வாக்கு கேட்டு, அதிமுக முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

முன்னதாக செய்தியாளர்க்ளைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், "அதிமுக கூட்டணி வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் போட்டி, அதிமுகவிற்கும், திமுகவிற்கும் மட்டும்தான். இது அனைவரும் அறிந்ததே. அதில் அதிமுக வெற்றி பெறும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை, யாரிடமும் எந்த நேரத்திலும் பல்லைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அவர் என்ன நினைக்கிறாரோ, அதை சொல்லக்கூடிய தைரியமிக்க தலைவர். முன்னதாக, பாஜகவுடன் கூட்டணியில் இருந்தோம். அதை மறுக்கவில்லை.

திமுகவும், பாஜகவுடம் கூட்டணியில் இருந்திருக்கிறார்கள். அதை அவர்களால் மறுக்க முடியுமா? இன்றைக்கு பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார். நாங்கள் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கிறோம். இது தான் எங்களின் கூட்டணி.

டிடிவி தினகரனைப் பொறூத்தவரை, அவர் அரசியலில் அனாதை ஆகிவிட்டார். எதையாவது பேசிக் கொண்டிருப்பார். வேறு வழியில்லாமல் பாஜகவுடன் சேர்ந்துள்ளார். எங்களுக்கு அவர் ஒரு பொருட்டே கிடையாது. அதிமுக வலுவாக உள்ளது. இந்த இயக்கம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்" எனத் தெரிவித்தார்.

இந்த அதிமுக மாவட்டச் செயலாளர் சேகர், மாநகரச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட அதிமுக, தேமுதிக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம்.. இறந்த பிறகும் தொடரும் சேவை.. கண்ணீர் மல்க திரைப்பிரபலங்கள் அஞ்சலி! - Tribute To Daniel Balaji

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.