ETV Bharat / state

“அரசு வேலை வாய்ப்புகள் யானை பசிக்கு சோளப்பொரி போல் உள்ளது” - ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்! - R B Udhayakumar - R B UDHAYAKUMAR

R.B.Udhayakumar: தமிழ்நாடு அரசுத் தேர்வு ஆணையத்தின் மூலமும், தேர்வு முகமைகளால் நடத்தப்படுகிற தேர்வு செய்யப்பட்ட நியமித்த அரசு வேலை வாய்ப்புகள் என்பது யானை பசிக்கு சோளப்பொரி போல உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 4:59 PM IST

மதுரை: தென் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி பெறுவதற்கு குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி பெறும் வகையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்திட அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில், 2013-2014-ல் மதுரை - தூத்துக்குடி தொழில் வழித்தடத்தை அரசாணை வெளியிட்டு Economic Corridor என அறிவித்தார். மதுரை - தூத்துக்குடி 160 கிலோமீட்டர் இடையே உள்ள பகுதியில் 10 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில், இந்தியாவிலேயே மிகப்பெரிய திட்டம் அமைந்திருக்கும். கோடிக்கணக்கில் வெளிநாட்டு முதலீடுகளை நாம் ஈர்த்திருக்கலாம். உள்நாட்டிலும் அதிக சிறு, குறு, நடுத்தர தொழில் யூனிட்டுகள் உருவாகி லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும்.

இத்திட்டத்தினால் ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ், உணவு பதப்படுத்துதல், ரசாயனம், மருந்துப் பொருட்கள் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் வளர்ச்சி ஏற்படுவதற்கு பொருளாதார வளர்ச்சி அதிகரித்திருக்கும் என்று மக்களால் பேசப்பட்டு வருகிறது. எனவே, ஜெயலலிதா அறிவித்தபடி மதுரை, தூத்துக்குடி தொழில் வழிச்சாலையை தாமதமின்றி உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் வருடத்திற்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள் என 5 வருடங்களுக்கு 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை தருவோம் என்றார். ஆனால், இன்றைக்கு எத்தனை ஆயிரம் பேருக்கு தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையத்தின் மூலமும், தேர்வு முகமைகளால் நடத்தப்படுகிற தேர்வு செய்யப்பட்டு நியமித்த அந்த வேலை வாய்ப்புகள் என்பது யானைப் பசிக்கு சோளப்பொரி போல உள்ளது.

தற்போது, இளைய சமுதாயம் வேலை இல்லாத காரணத்தினால் வறுமைச் சூழலில் இருந்து விடுபட முடியவில்லை. திறமைக்கேற்ற வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. உழைப்புக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைக்காத நிலையால், மன அழுத்தத்திற்கு உள்ளாகி போதைக்கு அடிமையாகக் கூடிய ஒரு சூழ்நிலை உள்ளது.

அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய மடிக்கணினி திட்டம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்குகிற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மானவர்கள் மற்றும் பெற்றோர் எதிபார்க்கின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திட்டங்களை கிடப்பிலே போடுவது, மக்களை வஞ்சிக்கிற செயலாக மக்களுடைய எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற செயலாக அமைந்திருக்கிறது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியை திமுக அரசு மறந்துவிட்டு, மக்கள், மாணவர்கள், பெற்றோர் நலன் சார்ந்து வேலை வாய்ப்புகளை அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த அரசு முன்வர வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: "அரசியல் முதிர்ச்சியில்லாத தலைவர் சீமான்" - அமைச்சர் கீதா ஜீவன் தாக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.