ETV Bharat / state

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: 2 நாள் கஸ்டடியில் எம்.ஆர். விஜயபாஸ்கர்... சிபிசிஐடி தீவிர விசாரணை..! - MR VIJAYABHASKAR Case

vijayabhaskar land grab case: அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரை இரண்டு நாள் கஸ்டடியில் எடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், காந்திகிராமம் திண்ணப்பா நகரில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பலத்த போலீஸ் பாதுகாப்பில் எம். ஆர். விஜயபாஸ்கர்
பலத்த போலீஸ் பாதுகாப்பில் எம்.ஆர். விஜயபாஸ்கர் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 11:16 AM IST

கரூர்: கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கடந்த 16-ம் தேதி கேரளா மாநிலம், திருச்சூரில் கைது செய்திருந்தனர்.

பின்னர் அவரை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 17ம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்த விஜயபாஸ்கர் ஜாமீன் கேட்டு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, சொத்து ஆவணங்கள் மோசடி வழக்கு தொடர்பாக எம்.ஆர். விஜயபாஸ்கரை மூன்று நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்வதற்காக சிபிசிஐடி போலீசார் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர் மற்றும் சிபிசிஐடி போலீசார் தரப்பு வழக்கறிஞர் வாதங்களைக் கேட்ட நீதிபதி பரத்குமார் விஜயபாஸ்கரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காந்திகிராமம் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். சிபிசிஐடி மேற்கு மண்டல எஸ்.பி. ஸ்ரீதேவி விஜயபாஸ்கரிடம் நில மோசடி பதிவு தொடர்பாக, சிபிசிஐடி தனி படை போலீசார் திரட்டிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து , சிபிசிஐடி போலீஸாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் பிரகாஷின் உறவினர் பிரவீன், காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு நாள் விசாரணை நிறைவடைந்து, நாளை மீண்டும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எம். ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட உள்ளார்.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி! அரசின் அடுத்த திட்டம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.